கம்பராமாயணம் 3363 · ஆரணிய 7.214

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தன் மானம் இலாத தயங்கு ஒளி சால்
மின் மானமும் மண்ணும் விளங்குவது ஓர்
பொன் மான் உருவம் கொடு போயினன் ஆல்
நன் மான் அனையாள் தனை நாடுறுவான் .

பொருள் · Meaning in Tamil

தன் மானம் இலாத - தனக்கு நிகர் இல்லாத; தயங்கு ஒளி சால் - அசைகின்ற ஒளி பொருந்திய; மின் - உடல் மின்னுதலால்; வானமும் மண்ணும் விளங்குவது ஒர் - விண்ணும் மண்ணும் விளக்கமுறும் படியான ஒரு; பொன் மான் உருவம் - தங்க மானின் வடிவம்; கொடு போயினன் - எடுத்துக் கொண்டு மாரீசன் சென்றான்; நன்மான் அனையாள் தனை - உயர்ந்த மான் போன்ற சீதையினை; நாடுறுவான் - தேடிச் சென்று அடைந்தான்; ஆல் - அசை.

மாயமான் கண்டாரைக் கவரும் ஒளிமிக்கதாய் விளங்கியது. தனை நாடுறுவான் என்பதற்குச் சீதை தன்னை நாடும்படியாகச் சென்றான் எனவும் பொருள் கூறுவர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Taking the form of a golden deer, matchless, full of shimmering light,
  2. its gleam making sky and earth shine,
  3. he went on his way
  4. to seek out the woman who was like a fine doe.

What the poem says

Mārīcaṉ takes on the shape of a golden deer whose shimmering light makes earth and sky glow. It is beautiful enough to captivate anyone who sees it.

So he goes to find Cītai, who is herself as graceful as a deer. The last line can also be read as: he went so that she would seek him out.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taṉ māṉam ilāta tayaṅku oḷi cāl
miṉ vāṉamum maṇṇum viḷaṅkuvatu ōr
poṉ māṉ uruvam koṭu pōyiṉaṉāl
naṉ māṉ aṉaiyāḷtaṉai nāṭuṟuvāṉ.