கம்பராமாயணம் 3364 · ஆரணிய 7.215
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நிலையா மனம் - யாரிடத்தும் உறுதியாக நில்லாத மனமும்; வஞ்சனை - வஞ்சிக்கும் பாங்கும்; நேயம் இலா - உண்மையான அன்பும் இல்லாத; விலைமாதர்கண் - கணிகையரிடத்தில்; யாரும் விழுந்தெனவே - காமமுற்றார் மனம் இழந்தாற் போல; கலைமான் முதல் ஆயின கண்ட எலாம் - கானகத்தில் உள்ள கலை மான் முதலாக அப்பொன் மானைப் பார்த்த விலங்குகள் யாவும்; அலை மானுறும் - கடல் போன்று; ஆசையின் வந்தன - பெருகிய ஆவலுடன் வந்து சூழ்ந்தன; ஆல் - அசை
விலைமகளிர் போலப் பொன்மான் அமைய, அம் மகளிரிடம் ஆசை கொண்டார் போலப் பிற விலங்குகள் வந்தன என்றார். உவமையணி.
விலைமகளிர் யார் மீதும் அன்பு வையார் அது போல் பொன்மானுக்கும் பிற விலங்குகளின் மீது பற்றில்லை. விலை மகளிருக்குப் பொன் மீது மட்டும் பற்று உண்டு. மாயமானுக்கும் பொன்னாகிய சீதை மீது நாட்டம் உண்டு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Stags and every other creature that saw it
- came with longing that surged like the sea,
- as all men fall for women who sell themselves,
- whose hearts are fickle and false, without love.
What the poem says
The forest animals, led by the stags, crowd round the golden deer with surging desire, like men who lose their heads over courtesans.
The simile goes further. A courtesan loves no one and cares only for gold. The false deer has no feeling for the animals around it either; it is after only the golden Cītai.