கம்பராமாயணம் 3365 · ஆரணிய 7.216

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பொய் ஆம் என ஓது புறம் சொல் இன் ஆல்
நையா இடை நோவ நடந்திடுவாள்
வைதேவி தன் வால் வளை முன்கை எனும்
கொய்யா மலரால் மலர் கொய்குறுவாள் .

பொருள் · Meaning in Tamil

பொய் ஆம் என ஓது புறஞ்சொலினால் - (இவள் இடை) பொய்யே ஆகும் என்று அயலாளர் கூறுவதற்கேற்ப; நையா - வருத்தம் கொண்டு விளங்கும்; இடை நோவ - இடை நோகும்படி; நடந்தனள் - நடப்பவளாய்; வைதேவி - சீதை; தன் வால்வளை மென்கை எனும் - ஒளி பொருந்திய வளையல் அணிந்த தன் மெல்லிய கரங்கள் என்னும்; கொய்யா மலரால் - பறிக்கப்படாத மலர்களால்; மலர் கொய்குறுவாள் - கானகத்தில் பூப்பறிக்க முற்பட்டாள். ஆல் - அசை.

இடை பொய் எனல் கவிதை மரபு. இதனால் இடைக்கு வருத்தம் ஏற்பட்டதாகக் கற்பித்தார். விதேக அரசன் குலமகள் என்பதால் வைதேகி எனப்பட்டாள். இங்கு வைதேவி எனத் திரிந்து வந்தது. கையெனும் கொய்யா மலர் - பறவாக் கொக்கு என மாமரம் அழைக்கப்பட்டாற்போல் கரங்களை இவ்வாறு கூறினார் கொய்யா மலர் மலர் கொய்தது எனக் கவிதையழகு மிளிர முரண் அணியுடன் கூறினார் மூன்றாம் வரியில் 'வய்தேவி' என ஓசை எழுதலால் எதுகை பிழையாதாயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. While, as if stung by the gossip that it does not exist,
  2. her slender waist ached as she walked,
  3. Vaitēvi, with her soft hands bright with bangles,
  4. flowers that no one plucks, was plucking flowers.

What the poem says

The scene shifts to Cītai, called Vaitēvi, the princess of Vidēha. Poets like to say that a beautiful woman's waist is so slender it does not exist at all. Here her waist is imagined as hurt by that rumour, and it aches as she walks.

Her hands are flowers no one has plucked, and she is using them to pluck flowers. The poet enjoys the paradox.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poy ām eṉa ōtu puṟañcoliṉāl
naiyā iṭai nōva naṭantaṉaḷāl
vaitēvi taṉ vāl vaḷai meṉ kai eṉum
koyyā malarāl malar koykuṟuvāḷ.