கம்பராமாயணம் 3367 · ஆரணிய 7.218

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1காணா இது கைதவம் என்று உணராள் ,
பேணாத நலம் கொடு பேணினள் ஆல் ;
வாணாள் அவ் இராவணன் மாளுதல் ஆல்
வீழ் நாளில் அறம் புவி மேவுதல் ஆல் .

பொருள் · Meaning in Tamil

அவ் இராவணன் வாழ்நாள் - அந்த இராவணனின் ஆயுட் காலம்; மாளுதலால் - முடிய இருப்பதனாலும்; வீழ் நாளில் - அவன் மரணமுறுறெ நாளில்; அறம் புவி மேவுதலால் - தருமம் பூமியில் செழிக்க இருப்பதனாலும்; (சீதை); காணா - பொன்மானைக் கண்டு; 'இது கைதவம்' என்று உணராள் - 'இது வஞ்சனை வேடம்' என்று உணராதவள் ஆனாள்; பேணாத - ஆதரித்தற்கு ஒவ்வாத; நலம் கொடு பேணினள் - அழகில் ஆர்வம் கொண்டு (மாயமானை) விரும்பி நின்றாள். (ஆல்-அசை) சீதை மாயமானை விரும்பியதற்குக் காரணம் இராவணன் அழிவும், அறத்தின் புத்துயிர்ப்பும் ஒரு சேர நடைபெறும் காலம் நெருங்கியதால் என்றார்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Seeing it, she did not know it for a trick,
  2. and longed for that beauty which should not have been longed for,
  3. because the life of that Irāvaṇaṉ was to end,
  4. and on the day he fell, righteousness would come to dwell on the earth.

What the poem says

Cītai, wise as she is, does not see through the trick and wants the deer for its beauty. The poet says why. Irāvaṇaṉ's life is running out, and his death is to bring righteousness back to the earth.

Her moment of desire is the first step towards both of these things.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāṇā itu kaitavam eṉṟu uṇarāḷ,
pēṇāta nalam koṭu pēṇiṉaḷāl;
vāḻnāḷ av irāvaṇaṉ māḷutalāl
vīḻ nāḷil aṟam puvi mēvutalāl.