கம்பராமாயணம் 3370 · ஆரணிய 7.221
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இம் மான் - இது போன்றதொரு மான்; இந் நிலத்தினில் இல்லை - இந்த உலகத்தில் இதுவரை இருந்ததில்லை; எனா - என்று ஆராய்ந்து; எம்மான் - எம் தலைவனும்; தேமலரோன் அம்மானும் - பிரமனது தந்தையுமாகிய இராமபிரான்; இதனைச் சிறிது எண்ணல் செயான் - இவ்வாறு சற்றும் சிந்தியாதவனாய்; செம்மான் அவள் - செம்மை நிரம்பிய மான் போன்ற சீதையின்; சொல் கொடு - ஆசைச் சொற்களை ஏற்று; அருத்தியன் ஆயினன் - தானும் (மானின்மேல்) விருப்பம் கொண்டான்; ஆல் - ஈற்றசை
எல்லாவற்றையும் படைக்கும் பிரமனின் தந்தையான இராமனுக்கு, இம் மாயமான் போன்றதொரு படைப்பு இயற்கையில்லை என்ற ஆராய்ச்சி ஏற்படவில்லை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- That such a deer does not exist in this world,
- our lord did not stop to think even a little;
- at the words of that fair doe-like woman, he, the father
- of Brahmā of the honeyed lotus, also came to desire it.
What the poem says
Irāmaṉ, the supreme lord who is father even to Brahmā the creator, does not pause to think that no such deer exists in nature. Moved by Cītai's words, he too begins to want it.
The commentary notes the irony: the one from whom all creation comes fails to see that this creature is not part of creation.