கம்பராமாயணம் 3373 · ஆரணிய 7.224

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நில்லா உலகின் நிலை நேர்மையின் ஆல்
வல்லாரும் உணர்ந்திலர் ; மன் உயிர்தாம்
பல் ஆயிர கோடி பரந்து உள ஆல் ;
இல்லாதன இல்லை இளங்குமரா !

பொருள் · Meaning in Tamil

இளங்குமரா - இளமையுடைய தம்பி!; நேர்மையினால் வல்லாரும் - முறையான அறிவிலே திறமை சான்றவரும்; நில்லா உலகின் நிலை உணர்ந்திலர் - நிலையில்லா உலகின் தன்மை முற்றும் அறிந்ததில்லை; மன் உயிர்தாம் - வாழும் நிலை பெற்ற உயிரினங்களோ எனில்; பல்ஆயிரம் கோடி பரந்துளது - எண்ணிலாக் கோடிகளாய் விரிந்து பரந்து உள்ளன; இல்லாதன இல்லை - இவ்வுலகில் இல்லாதவை என்று (நம் அறிவை மட்டும் வைத்து) எவற்றையும் விலக்கிக் கூற முடியாது' (என்றான் இராமன்; ஆல் - அசை. உலகின் இயற்கை முழுவதையும் யாரும் கணித்தறிந்ததில்லை. அதிலும் நீயோ இளங்குமரன், ஆனபடியால் புதிய ஒன்றை இல்லையென மறுத்தல் பொருந்தாது என்றான் இராமன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The state of this unstable world even those skilled
  2. in true knowledge have not grasped; the living beings that abide
  3. are spread out in many thousands of crores;
  4. there is nothing that does not exist, young prince!'

What the poem says

Irāmaṉ answers Ilakkuvaṉ. Not even the wisest have fully understood the changing world, and living things exist in countless millions of kinds.

So no one can say for certain that something does not exist, least of all someone as young as Ilakkuvaṉ. It is wrong to rule out a creature just because we have never seen one.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nillā ulakiṉ nilai nērmaiyiṉāl
vallārum uṇarntilar; maṉ uyirtām
pal āyiram kōṭi parantuḷatāl;
illātaṉa illai iḷaṅkumarā!