கம்பராமாயணம் 3374 · ஆரணிய 7.225

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என் என்று நினைந்தது ? இழைத்து உளம் , நம்
கன்னங்களின் வேறு உள காணுதும் ஆல் ;
பொன்னின் ஒளி மேனி பொருந்திய ஏழ்
அன்னங்கள் பிறந்தது அறிந்திலையோ !

பொருள் · Meaning in Tamil

உளம் இழைத்து - மனத்தினால் சிந்தித்து; என் என்று நினைத்தது - என்ன முடிவுக்கு வந்தாய்?; நம் கன்னங்களின் - நம் செவிகளில் (அன்றாடம்); வேறு உள காணுதும் - புதிது புதிதான செய்திகள் கேட்கின்றோமே; பொன்னின் ஒளி மேனி பொருந்திய - தங்க நிறம் உடலிற் பொருந்திய; ஏழ் அன்னங்கள் - ஏழு அன்னப் பறவைகள்; பிறந்தது அறிந்திலையோ? - தோன்றிய செய்தியை நீ கேட்டதில்லையா? (ஆல் - அசை)

புராண மரபில் ஏழு பொன் அன்னங்களின் செய்தி கூறப்படுதலை இராமன் நினைவு கூர்ந்தான். (மானச சரோவரத்தின் கரையில் யோகாப்பியாசம் செய்த பரத்துவாச புத்திரர் எழுவர் ஒழுக்கம் குன்றியதால் தங்கள் பயிற்சி கைகூடாமல் மரணமுற்றனர் பின்னர்க் குருக்ஷேத்திரத்தில் கெளசிக புத்திரர்களாய்ப் பிறந்தனர். கார்க்க முனி சீடர்களாய் இருந்தபோது அவனுடைய காமதேனுப் பசுவைக் கொன்று தின்றனர். ஆயினும் முன்னோர்க்கு உரிய பிதிர்க்கடன் செய்தமையால் பல்வேறு பிறவிகளில் வேடராய், விலங்காய், சக்கரவாகப் பறவையாய், அன்னப் பறவையாய் மாறி மாறிப் பிறந்தனர். கடைசியில் முக்தி பெற்றனர் என்பர்.

பதம கர்ப்பம், அரவிந்தாட்சம், சீர கர்ப்பம், சுலோசனம், பிந்து, சுபிந்து, ஹைமகர்ப்பம் என அன்னங்கள் பெயர் பெற்றன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'What have you concluded, thinking it over in your mind? With our
  2. own ears we hear every day of things beyond the ordinary;
  3. that seven swans were born with bodies
  4. bright as gold, have you not heard?'

What the poem says

Irāmaṉ goes on: every day we hear of marvels. He recalls a Purāṇic story of seven golden swans.

The commentary tells it. Seven sons of a sage were reborn again and again because they had fallen from discipline, once even killing and eating their teacher's wish-granting cow. Because they still performed the rites owed to their ancestors, they passed through births as hunters, beasts, cakravāka birds and swans, until at last they were freed. If golden swans can exist, so can a golden deer.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉ eṉṟu niṉaittatu? iḻaittu uḷam, nam
kaṉṉaṅkaḷiṉ vēṟu uḷa kāṇutumāl;
poṉṉiṉ oḷi mēṉi poruntiya ēḻ
aṉṉaṅkaḷ piṟantatu aṟintilaiyō!