கம்பராமாயணம் 3387 · ஆரணிய 7.238
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆயிடை - இப்பேச்சுக்களின் இடைப்புகுந்து, அன்னம் அன்னாள் - பேடை அன்னம் போன்ற சீதை; மாழ்கி - வருத்தமுற்று; அமுது உகுத்தனைய - அமுதம் சிந்தினாற் போன்று; செய்ய வாயிடை மழலை இன்சொல் - சிவந்த வாயில் இனிய மழலை போலும் சொற்களை; கிளியினின் குழறி - கிளி மொழிவதுபோல் கொஞ்சிக் கூறி; நாயக - என் நாதனே; நீயே பற்றி நல்கலைபோலும் - இம்மானை நீயே பிடித்துத் தரமாட்டாயா; என்னா - என்று (ஊடல் கொண்டு), சேயரிக் குவளை - சிவந்த வரிகளை உடைய குவளை மலர் போன்ற கண்களில்; முத்தம் சிந்துபு - கண்ணீர் முத்துக்கள் சிந்த; சீறிப் போனாள் - கோபம் கொண்டு செல்லத் தொடங்கினாள்.
இலக்குவன் கருத்தைத் தன் ஊடற் கோலத்தால் இராமபிரானிடம் மறுத்துக் கூறுகின்றாள் சீதை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At that, she who was like a swan, from her red mouth as if pouring out nectar,
- lisping sweet words like a parrot, in distress said,
- 'My lord! It seems you will not catch it and give it me yourself,'
- and shedding pearls from her red-veined lily eyes, she went away in a temper.
What the poem says
Cītai, graceful as a swan, cuts into the brothers' talk. In a sweet, childlike voice, like a parrot's, she complains that Irāmaṉ will not catch the deer for her himself.
Tears run like pearls from her lily-like eyes, and she turns away in a lover's sulk. Her pique is her answer to Ilakkuvaṉ's objection.