கம்பராமாயணம் 3389 · ஆரணிய 7.240
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
முன்னமும் மக வாய் வந்த - விசுவாமித்திர முனிவனது யாகத்தில் முன்னர் வந்த; மூவரில் ஒருவன் போனான் - மூன்று அரக்கருள் ஒருவன் ஆகிய மாரீசன் தப்பிப் போனான்; இதனை அன்ன மாரீசன் என்றே - அந்த மாரீசனாக (இம்மான் இருத்தல் கூடுமோ என்று; அயிர்த்தனன் - ஐயம் கொண்டேன்; (அதனால்; ஐயா - என் ஐயா; இன்னமும் காண்டி - மேலும் சிந்தித்துப் பாராய்; ஏகு - செல்வாயாக; வாழி - (தீங்கு நேராது) வாழ்க; என இரு கை கூப்பி - என்று இரண்டு கரங்களையும் எடுத்து வணங்க; பொன்னனாள் புக்க சாலை - திருமகளான சீதை புகுந்த பர்ண சாலையை; புறத்து நின்றே காத்தனன் - வாசலில் நின்றவாறு காவல் காக்கத் தொடங்கினான்.
கூரிய அறிவு மிக்க இலக்குவன் தன் சகோதரனுக்குக் கடைசிக் கணத்திலும் அறிவுரை கூறித் தெருட்டும் நுட்பம் வியப்புக்கு உரியது. மகம் - யாகம்; மக வாய் வேள்வியின் போது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Of the three who came before to the sacrifice, one got away;
- I suspected this to be that same Mārīcaṉ; sir,
- think on it still; may you prosper; go,' and folding both hands,
- he stood outside and guarded the hut that the golden woman had entered.
What the poem says
Ilakkuvaṉ gives his brother one last warning. Of the three demons who attacked Vicuvāmittiraṉ's sacrifice long ago, one, Mārīcaṉ, escaped; he suspects the deer is that same Mārīcaṉ.
Then he folds his hands, wishes Irāmaṉ well and lets him go. Cītai has gone into the leaf hut, and he takes up his watch at its door. Even at the last moment he advises his brother clearly.