கம்பராமாயணம் 3390 · ஆரணிய 7.241
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மந்திரத்து இளையோன் - எண்ணிச் சிந்திக்க வல்ல தம்பி இலக்குவன்; சொன்ன வாய்மொழி - எடுத்துக் கூறிய வாய்மை மிக்க மொழியை; சிகரச் செவ்விச் சுந்தரத் தோளினான் - மலையென உயர்ந்த அழகிய தோள்களை உடைய இராமன்; மனத்துக் கொள்ளான் - தன் மனத்தில் ஏற்றுக் கொள்ளாதவனாய், சந்திரற்கு உவமை சான்ற - பூரணச் சந்திரனுக்கு உவமை கூறத்தக்க; வதனத்தாள் சலத்தை நோக்கி - முகத்தை உடைய சீதையின் கோபத்தையே எண்ணியவனாய்; சிந்துரப் பவளச் செவ்வாய் முறுவலன் - சிந்தூரமும் பவளமும் போன்ற சிவந்த இதழ்களில் புன்முறுவல் பூண்டவனாய்; அம்மானினைத் தொடரல் உற்றான் - அந்த மானைத் தொடர்ந்து செல்லத் தொடங்கினான்.
வாய்மொழி - வாய்மை ஆகிய மொழி. பண்புத் தொகை. வாயின் மொழி எனப் பொருள் கொண்டால் வேற்றுமைத் தொகை.
இலக்குவனின் எச்சரிக்கையும், சீதையின் கோபமும் இராமனுக்குச் சிரிப்பைத் தந்தன, அவன் வீரனாகையால்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Not taking to heart the true words the counselling younger brother had spoken,
- thinking of the anger of her whose face was worthy to be likened to the moon,
- with a smile on his lips red as vermilion and coral, he of handsome shoulders
- lovely as mountain peaks set out to follow that deer.
What the poem says
Irāmaṉ does not take his wise brother's warning to heart. He thinks only of Cītai, with her moon-like face, and her displeasure.
Smiling, he sets out after the deer. The commentary says Ilakkuvaṉ's caution and Cītai's sulk only make him smile, because he is a warrior and fears nothing.