கம்பராமாயணம் 3391 · ஆரணிய 7.242
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(அந்த மாய மான்; மெல்ல மெல்ல மிதித்தது - மெதுவாய் மெதுவாய் நிலத்தில் ஊன்றி நடந்தது; வெருவி வெறித்தது - (பின்னறி அஞ்சினாற் போல் வெறித்து நோக்கியது; செவியை நீட்டி - காதுகளை விறைத்து நீட்டியவாறு; குரபதம் உரத்தைக் கூட்டி - தன் கால் குளம்புகளை மார்புடன் ஒடுக்கி; மீதில் குதித்தது - வானேறித் தாவியது; உதித்து எழும் ஊதை - பொங்கி வரும் காற்று; உள்ளம் என்று இவை - மனம் என்னும் இவற்றை, உருவச் செல்லும் கதிக்கு - (வாயு வேகம், மனோ வேகம் என்கின்ற வேகங்களை) தாண்டிச் செல்லும் விரைவு நடைக்கு; ஒரு கல்வி - ஒரு புதிய பெயரைக் கற்பிக்கும்படி வேறே காட்டுவது ஒத்தது - புதிதான நடையைக் காட்டுவதாய் அமைந்தது; அன்றே - ஈற்றசை.
வாயு வேக, மனோ வேகங்களைக் கடந்த வேகத்தில் இம்மான் சென்றதால் புதிய பெயர் ஒன்று சூட்டும்படியாக அவ்வேகம் அமைந்தது என்றார்
ஆங்கிலம் · English translationAI
Translation
- It stepped softly, softly; it stared; then, as if startled, it leapt up high,
- ears stretched out, hooves drawn in to its chest,
- and in a gait that outstripped the rising wind and the mind,
- it seemed to be teaching a new art of speed.
What the poem says
The poet describes the false deer as Irāmaṉ follows. It steps delicately, stares, then leaps into the air as if frightened, ears pricked and hooves tucked against its chest.
The wind and the mind are the usual examples of great speed, and the deer outruns both. It seems to be showing a new kind of swiftness that needs a name of its own.