கம்பராமாயணம் 3392 · ஆரணிய 7.243

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நீட்டினான் உலகம் மூன்றும் நின்று எடுத்து அளந்த பாதம் ;
மீட்டும் தாள் நீட்டற்கு அம்மா ! வேறும் ஓர் அண்டம் உண்டோ ?
ஓட்டினான் , தொடர்ந்த தன்னை ஒழிவு அற நிறைந்த தன்மை
காட்டினான் அன்றி , அன்று அக் கடுப்பை யார் கணிக்கற் பாலார் .

பொருள் · Meaning in Tamil

(இராமன் அந்த மாயமானைத் தொடருவதற்காக); உலகம் மூன்றும் அளந்த பாதம் - மூவுலகையும் அளந்த திருவடிகளை; நின்று எடுத்து நீட்டினான் - எடுத்து நீள வைத்தான்; மீட்டும் தாள் நீட்டற்கு வேறும் ஓர் அண்டம் உண்டோ? - மேலும் அவன் அளப்பதற்குரிய உலகம் வேறு ஒன்று இருக்கிறதோ? ஓட்டினான் - அத்தகைய பாதங்களால் (மானைத்) துரத்தினான்; தொடர்ந்த தன்னை - அவ்வாறு துரத்திய பெருமான் மானைத் தொடர்ந்து தனது; ஒழிவு அற நிறைந்த தன்மை - நீக்கமற எங்கும் நிறைந்த நிலையினை; காட்டினான் - (எங்கும் திரிந்ததால்) காட்டி நின்றான்; அன்றி - இதுதான் உண்மையே அன்றி; அன்று அக்கடுமை - அன்று அம்மான் சென்ற வேகத்தின் கடுமையை; கணிக்கற்பாலார் யார்? - கணக்கிட வல்லவர் யாவர்?

வாமனனாக இருந்து திருவிக்கிரமாவதாரம் எடுத்த காலை எல்லா உலகங்களிலும் கால் நீட்டிய திருமால், இன்று இந்த மான் காரணமாக எல்லா இடங்களிலும் தொடர்ந்து காட்சி தந்தான். அதனால் எங்கும் நிறை இறைவன் எனக் காட்டிக் கொண்டான். அம்மா - அசை; வியப்பிடைச் சொல்லுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He stretched out the foot that once rose and measured all three worlds;
  2. ah, is there yet another universe for that foot to stretch over?
  3. He drove it on, and in following it he only showed
  4. his nature, filling all without a gap; who could reckon that day's swiftness?

What the poem says

The poet recalls Viṣṇu as Vāmaṉa, the dwarf who grew huge and measured the three worlds in his strides. That same foot now strides after the deer, though there are no new worlds left for it to cover.

As Irāmaṉ chases the deer everywhere, he only reveals that he is the god present in every place. No one could measure how fast the deer ran that day.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nīṭṭiṉāṉ ulakam mūṉṟum niṉṟu eṭuttu aḷanta pātam;
mīṭṭum tāḷ nīṭṭaṟku ammā! vēṟum ōr aṇṭam uṇṭō?
ōṭṭiṉāṉ, toṭarnta taṉṉai oḻivu aṟa niṟainta taṉmai
kāṭṭiṉāṉ aṉṟi, aṉṟu ak kaṭumai yār kaṇikkaṟpālār.