கம்பராமாயணம் 3394 · ஆரணிய 7.245
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
காயம் வேறு ஆக - (இந்த மானின் வடிவம் மானாக வேறுபட்டிருந்தாலும்; செய்யும் கருமம் வேறு ஆகிற்று அன்றே - இதன் செயல்களோ மானின் இயல்பிலிருந்து மாறுபட்டதாய்த் தோன்றுகின்றன; என்னின் முன்னம் - எனக்கு முன்னே; இளவற்கு எண்ணமே உண்டே - தம்பி இலக்குவனுக்கு இது குறித்த சிந்தனை தோன்றியதில் நியாயம் உண்டு தானே; ஏயுமே - (அவன் எண்ணம்) பொருத்தமாகத்தான் இருக்கிறது; ஆயுமேல் - நன்றாக நானும் ஆராய்ந்திருந்தால்; உறுதல் செல்லாம் - இங்கு வந்திருக்க மாட்டேன்; ஆதலால் - எனவே, நான் வருந்தியது - நான் இப்போது வருந்தி உணர்வது; அரக்கர் செய்த மாயமே ஆயதே - இராக்கதர் மாயம் செய்ததன் விளைவையே, என்றான் வள்ளல் - என அருள் வள்ளலாகிய இராமன் எண்ணினான்.
மானின் இயல்புக்கு மாறாகத் தந்திரம் வல்லதாக இம் மாயமான் இயங்குகிறது. ஒரு கட்டத்தில் களைப்புற வேண்டிய விலங்கு இராமனை இழுத்துக் கொண்டு தொலை தூரம் வந்து விட்டது. இவற்றால் இராமன் மனம் சிந்திக்கலாயிற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Its body is one thing, and the deeds it does have become another;
- my younger brother had the thought before me, and it was right;
- had I weighed it, I would not have come; so what I have toiled over
- has proved to be a demons' illusion,' thought the generous one.
What the poem says
At last Irāmaṉ begins to see. The creature looks like a deer but does not behave like one: an animal should have tired long ago, yet it has led him far away.
Ilakkuvaṉ saw this first and was right. Had Irāmaṉ thought it through he would never have come, and what he has been chasing is a demon's trick.