கம்பராமாயணம் 3397 · ஆரணிய 7.248
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நெட்டிலைச் சரம் - நெடிய இலை வடிவம் கொண்ட அவ்வம்பு; வஞ்சனை நெஞ்சுறப் பட்டது - வஞ்சகம் நிரம்பிய (மாரீசன்) நெஞ்சில் சென்று தாக்கியது; அப்பொழுதே - அந்தக் கணமே; பகு வாயினால் - பிளவுபட்ட வாயினால்; அட்டதிக்கினும் - எட்டுத் திசைகளிலும், அப்புறமும் புக - அதற்கு அப்பாலும் செல்லும்படி; விட்டு அழைத்து - (சீதா லட்சுமணா என்று இராமன் குரலில் கூவி; ஒரு குன்று என வீழ்ந்தனன் - மலை விழுவது போல (தன் இயற்கை வடிவம் கொண்டு) வீழ்ந்தான்.
தன் குரலை இராமன் குரலாக மாற்றி அழைத்து மடிந்தான். மடியும் போதும் வஞ்சனையால் 'சீதா லட்சுமணா என்று குரல் கொடுத்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The long-bladed arrow struck home in that deceitful heart;
- at that moment, from his gaping mouth,
- he cried out a call that reached the eight directions and beyond,
- and fell like a hill.
What the poem says
The arrow pierces Mārīcaṉ's treacherous heart. Even as he dies he keeps up the deceit: he imitates Irāmaṉ's voice and calls out to Cītai and Ilakkuvaṉ, so loudly that the cry reaches every direction.
Then he falls, back in his own huge shape, like a collapsing hill.