கம்பராமாயணம் 3399 · ஆரணிய 7.250
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆசை நீளத்து - திசைகளின் எல்லை அளவும் எட்டும்படி; அரற்றினன் வீழ்ந்த - குரலெடுத்துக் கூவி மாண்ட; அந்நீசன் மேனியை - அக் கீழ்மகன் உடலை; நின்று உற நோக்கினான் - அருகில் நின்று உற்றுப் பார்த்தான் (இராமன்); மாசு இல் மாதவன் - குற்றம் இல்லாத பெருந்தவமுடைய விசுவாமித்திரனது; வேள்வியின் வந்த - யாக காலத்தில் வந்த; மாரீசனே இவன் - மாரீசனே இவன்; என்பதும் தேறினான் - என்பதனையும் உணர்ந்து கொண்டான்.
ஆசை - திக்கு என்று பொருள்படும் வடசொல். இலக்குவன் உய்த்துணர்ந்த அரக்கன் மாயத்தை இராமன் அனுபவித்தே அறிந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The vile one who had cried out to the ends of the directions and fallen,
- his body he stood and looked at closely,
- and was sure that this was Mārīcaṉ, who had come
- to the sacrifice of the spotless great ascetic.
What the poem says
Irāmaṉ stands over the fallen demon and studies his body. He recognises Mārīcaṉ, who disturbed Vicuvāmittiraṉ's sacrifice long ago.
What Ilakkuvaṉ worked out by reasoning, Irāmaṉ has now learned through experience.