கம்பராமாயணம் 3400 · ஆரணிய 7.251

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1'
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1' புழைத்த வாளி உரம் புகப் புல்லியோன் ,
இழைத்த மாயையின் என் குரலால் எடுத்து
அழைத்தது உண்டு ; அது கேட்டு அயர் வெய்தும் ஆல்
மழைக் கண் ஏழை ' என்று உள்ளம் வருந்தினான் .

பொருள் · Meaning in Tamil

புழைத்த வாளி - ஊடுருவிச் செல்லும் அம்பு; உரம் புக - தன் மார்பில் பட்டதும்; புல்லியோன் - இழிந்தவனாகிய மாரீசன்; இழைத்த மாயையின் - செய்த மாயத்தினால்; என் குரலால் இசைத்து - என் குரல் போன்ற குரலால் (சீதையையும் இலக்குவனையும்) கூவி; அழைத்தது உண்டு - அழைத்துள்ளான் அல்லவா?; அது கேட்டு - அக்குரலைப் பிறழ உணர்ந்து; மழைக்கண் ஏழை - மழை போல் குளிர்ந்த கண்களை உடைய பேதை ஆகிய சீதை; அயர்வு எய்தும் - துன்பம் உறுவாள்'; என்று உள்ளம் வருந்தினான் - என்று மனம் நொந்தான் (இராமன்). ஆல் - அசை

மழைக் கண் - மழை போல் கண்ணீர் விடுறெ கண் என்றுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'When the piercing arrow entered his chest, the base one,
  2. by the illusion he wove, cried out in my voice
  3. and called; hearing it, she will be in anguish,
  4. the simple one with rain-cool eyes,' and his heart grieved.

What the poem says

Irāmaṉ realises the danger. As he died, Mārīcaṉ called out in Irāmaṉ's own voice. Cītai will take that cry for her husband's and be overcome with grief.

'Rain-cool eyes' can also mean eyes that pour tears like rain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1' puḻaitta vāḷi uram pukap pulliyōṉ,
iḻaitta māyaiyiṉ eṉ kuralāl icaittu
aḻaittatu uṇṭu; atu kēṭṭu ayarvu eytumāl
maḻaik kaṇ ēḻai ' eṉṟu uḷḷam varuntiṉāṉ.