கம்பராமாயணம் 3401 · ஆரணிய 7.252

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1'
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1' மாற்றம் இன்னது மாயம் , மாரீசன் என்று
ஏற்றம் முன் உணர்ந்தான் , இருந்தான் ; எனது
ஆற்றல் தேரும் அறிவினன் , ஆதலால்
தேற்றும் ஆல் , இளையோன் ' எனத் தேறினான் .

பொருள் · Meaning in Tamil

இளையோன் - தம்பி இலக்குவன்; ஏற்ற காலையின் - மானை எதிர் கொண்ட அளவிலே; மாய மாரீசன் என்று முன் உணர்ந்தான் - மாயை செய்தவன் மாரீசன் என்று முன்னமே அறிந்து சொன்னான்; எனது ஆற்றல் தேரும் அறிவினன் ஆதலால் - (இப்போதும்) என்னுடைய வலிமையை நன்கு தெளிவாக அறிந்திருப்பவனாதலால்; மாற்றம் இன்னது தேற்றும் - சீதைக்கு ஆறுதல் கூறி இக்குரலின் உண்மையை உணர்த்தியிருப்பான்; எனத் தேறினான் - என ஆறுதல் கொண்டு மனத் தெளிவு கொண்டான்; ஆல் - அசை.

தம்பியின் அறிவையும், ஆறுதல் தரும் மாட்சியையும் போற்றி மகிழ்ந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'That this was trickery, that it was Mārīcaṉ,
  2. he knew beforehand, at the very moment we met it; he is
  3. wise and knows my strength; therefore
  4. my younger brother will reassure her,' and he took comfort.

What the poem says

Irāmaṉ calms himself. Ilakkuvaṉ saw through the deer and named Mārīcaṉ from the start, and he knows that no harm can come to Irāmaṉ.

Surely he will explain to Cītai that the cry was false and comfort her. Irāmaṉ takes heart, praising his brother's wisdom.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1' māṟṟam iṉṉatu māyam, mārīcaṉ eṉṟu
ēṟṟa kālaiyiṉ muṉ uṇarntāṉ, eṉatu
āṟṟal tērum aṟiviṉaṉ, ātalāl
tēṟṟumāl, iḷaiyōṉ ' eṉat tēṟiṉāṉ.