கம்பராமாயணம் 3439 · ஆரணிய 8.37
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பெருமையீர் - பெருமைக்குரியவரே!; தொல்குலத் தயரதன் தனையன் - பழைய இட்சுவாகு குலத்தைச் சேர்ந்த தயரத மன்னனின் மகன்; தம்பியோடு உயர்குலத்து அன்னை சொல் உச்சி ஏந்தினான் - தம் தம்பியுடன் உயர்ந்த கேகய குலத்தில் பிறந்த தாயின் கட்டளையைத் தலை மேல் தாங்கியவராய், அயர்விலன் - வருத்தம் இல்லாமல்; இவ்வழி உறையும் - இவ்விடத்தில் தங்கியிருக்கிறார் அன்னவன் பெயரினைத் தெரிகுதிர் என்றாள் - அவரது பெயரை நீங்கள் அறிந்திருக்கலாமே என்று விடை கூறினாள்.
தயரதன் குலம் இட்சுவாகு குலம். அணி அரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார்' எனக் குலமுறை கிளத்து படலத்தில் குறிக்கப் பெற்றுளது (638) கைகேயியினை 'உயர் குலத்து அன்னை என்றதால் சீதையும் இராமன் போல் கைகேயி பால் கொண்ட மதிப்புப் புலப்படும். 'அன்னை சொல் உச்சி ஏந்தியது' முன்னர்க் கைகேயி கூறிய மொழி கேட்டு 'இப்பணி தலைமேல் கொண்டேன்' (/604) என இராமன் கூறிய மொழிகளுடன் ஒத்தியைவன. இராமன் பெயரைத் தண்ட காரணியத்து முனிவர்கள் நன்கு அறிவர் ஆதலால் 'தெரிகுதிர்' என்றாள் சீதை கணவன் பெயரை மனைவி கூறா நிலையும் இதில் புலப்படும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The son of Tacarataṉ of ancient line, with his younger brother,
- bore on his head the word of his mother of high birth,
- and dwells here without complaint; his
- name you must surely know, honoured sir,' she said.
What the poem says
Cītai answers the false ascetic. The hermitage belongs to the son of Tacarataṉ, of the ancient solar line. He and his brother came to live in the forest uncomplainingly, honouring the command of his high-born mother Kaikēyi.
She calls Kaikēyi high-born, which shows that she respects her just as Irāmaṉ does. She does not speak her husband's name, as a wife traditionally would not. She assumes the sages of the forest all know him.