கம்பராமாயணம் 3440 · ஆரணிய 8.38

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1'' கேட்டனென் , கண்டிலென் ; கெழுவு கங்கை நீர்
நாடு இடை ஒருமுறை நண்ணினேன் ; மலர்
வாள் தடங் கண்ணின் நீர் யாவர் மா மகள் ?
காட்டிடை அரும் பகல் கழிக்கின்றீர் ! '' என்றான் .

பொருள் · Meaning in Tamil

கேட்டனென் - நீர் கூறிய செய்திகளை நான் முன்னரே கேள்விப்பட்டுள்ளேன்; கண்டிலென் - (ஆனால் அவற்றை நேரில் பார்த்ததில்லை; கெழுவு கங்கை நீர் நாட்டிடை ஒரு முறை நண்ணினேன் - மிக்க நீர்ப் பெருக்குடைய கங்கை பாயும் மருத வள நாட்டிடத்து ஒரு தடவை போயிருந்தேன்; மலர் வாள்தடங் கண்ணி - தாமரை மலர் போன்றும் வாள் போலும் நீண்ட கண்ணையுடையவளே!; நீர் யாவர் மா மகள் - நீவிர் யாருடைய பெருமைக்குரிய மகள்?; காட்டிடை அரும்பகல் கழிக்கின்றீர் என்றான் - இக் கொடிய காட்டில் அரிய நாட்களைக் கழிக்கின்றீர் எனக் கேட்டான்.

ஒரு முறை நண்ணினேன் என்பது முன்னர் இராவணன் திக்கு விசயம் செய்த போது அயோத்தியை ஆண்ட அனரணியன் என்பானைப் போரில் வீழ்த்தி நிந்தித்த போது அவன் தன் வழி முறையில் பிறக்கின்றவனால் கொல்லப்படுமாறு சபித்த வரலாறு நினைக்கப் பெறும். சீதையை நோக்கி வாள் தடங் கண்ணி என விளிப்பது பெருந்தடங் கண்ணி பேசலுற்றாள் (3354) எனக் குறிக்கப் பெற்றதும் ஒப்பிடற்குரியது. அயோத்தி அரண்மனையில் எல்லா நலனும் துய்த்தவள் இந்தக் காட்டில் துன்பப்பட்டு, நாளைக் கழிப்பதற்காக வருந்துபவன் போல் தன் மனத்தைக் காட்டிச் சீதையின் பரிவைப் பெற இராவணன் முயலும் முயற்சி இதுவாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'I have heard of him, but not seen him; I went once to the land
  2. watered by the full-flowing Gaṅgā; you with eyes like flowers
  3. and wide like swords, whose noble daughter are you,
  4. that you pass hard days in this forest?' he said.

What the poem says

Irāvaṇaṉ says he has heard of Irāmaṉ but never seen him, though he once visited the country of the Gaṅgā. The commentary links this to the story of his conquest of the world. He killed a king of Ayōttī, who cursed him to die at the hands of one born in that royal line.

He asks Cītai whose daughter she is, and pretends to pity her for living such a hard life in the forest. He is trying to win her sympathy.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' kēṭṭaṉeṉ, kaṇṭileṉ; keḻuvu kaṅkai nīr
nāṭṭiṭai orumuṟai naṇṇiṉēṉ; malar
vāḷ taṭaṅ kaṇṇi nīr yāvar mā makaḷ?
kāṭṭiṭai arum pakal kaḻikkiṉṟīr! '' eṉṟāṉ.