கம்பராமாயணம் 3479 · ஆரணிய 8.77
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மலையே - மலைகளே!; மரனே - மரங்களே!; மயிலே - மயில்களே!; குயிலே - குயில்களே!; கலையே - ஆண் மான்களே!; பிணையே - பெண்மான்களே!; களிறே - ஆண்யானைகளே!; பிடியே - பெண் யானைகளே!; நிலையா உயிரேன் நிலை - நிலைபெறாத உயிருடன் துன்புறும் என் நிலையை; தேறினிர் போய் - அறிந்தவர்களாகச் சென்று; உலையா வலியாருழை - அழியாத வலிமையுடைய இராமலக்குவரிடம்; நீர் உரையீர் - நீங்கள் சொல்லுங்கள் என்றாள் சீதை.
இராவணன்பால் சிக்கி உயிர் குலையும் தன் நிலையை அறிந்து, இராமலக்குவரிடம் எப்பொருளேனும் தெரிவித்துவிடாதா எனக் கையற்று அலறுவதை விவரிப்பது இப்பாடல். பண்டை இலக்கியங்களில் தலைவியைப் பிரிந்த தலைவனிடம் இவ்வாறு பல பொருள்களைத் தூது விடல் காணப்பெறும். ஞாயிறு திங்கள் அறிவே நாணே கடலே கானல் விலங்கே மரனே புலம் புறு பொழுதே புள்ளே நெஞ்சே அவையல பிறவும் நுவலிய நெறியாற் சொல்லுவ போலவும் கேட்குந போலவும் சொல்லியாங்கு அமையும் என்மனார் புலவர் எனத் தொல்காப்பிய நெறி (தொல். பொருள். செய்யுள் 200 பேராசிரியம்) உணர்த்துவது ஒப்பிடற்குரியதாம். வலிய பகைவரையும் எளிதில் அழிப்பவர் இராமலக்குவர் ஆதலால் உலையா வலியார் என உரைத்தாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- O mountains! O trees! O peacocks! O cuckoos!
- O stags! O does! O tuskers! O cow-elephants!
- You have seen the plight of me whose life is failing; go,
- and tell it to those whose strength never falters!
What the poem says
Cītai, carried off, calls on everything around her, the hills, the trees, the birds and beasts, to go and tell Irāmaṉ and Ilakkuvaṉ what has become of her. She calls the brothers those of unfailing strength because they destroy even the mightiest enemies with ease.
Sending messages through hills, animals and birds is an old convention of Tamil love poetry, where a lover separated from the beloved addresses things that cannot speak or hear as though they could. The classical grammar of poetics allows exactly this kind of address.