கம்பராமாயணம் 3480 · ஆரணிய 8.78

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
' '
''

பொருள் · Meaning in Tamil

மஞ்சே - மேகங்களே!; பொழிலே - சோலைகளே!; வனதேவதைகாள் - காட்டில் உள்ள தெய்வங்களே!; செஞ்சேவகனார் நிலை - நேர்மையுள்ள நல்ல வீரனாம் இராமனின் (என்னை இழந்ததால் அடையும்) துன்பநிலை; நீர் தெரிவீர் - நீங்கள் அறிவீர்கள்; அஞ்சேல் என நல்குதிரேல் - பயப்படாதே என்று எனக்கு ஆறுதல் அளிப்பீராயின்; அடியேன் உஞ்சால் அது தான் இழிவோ உரையீர் - அடியவளாகிய நான் (பிழைப்பேன் அவ்வாறு) பிழைத்தால் அது உங்களுக்குக் குறையாகுமா? சொல்லுங்கள்.

மலைமேலும் வானத்திலும் மஞ்சு இருக்கும். பொழிலும் வானுயர்ந்து நிற்கும். வனதேவதைகள் காட்டில் நடப்பனவற்றை அறிவார்கள். எனவே, அவையும் இராமன் என்னை இழந்து வருந்தும் நிலையை அறிந்திருக்கக் கூடும். அதனைத் தன்னிடம் கூறச் சீதை வேண்டுகிறாள். சேவகன் - வீரன்; இராமனைச் சேவகன் என்றழைத்தல் 'சேவகன் சீறா முன்னம் சேதுவும் இயன்ற மாதோ' என்ற அடியில் காணலாம் (4759). நிலை - இருக்கும் இடம் எனலுமாம்.

உஞ்சால் - போலி (உய்ந்தால்).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. You know the state of that true and noble hero;
  2. O clouds! O groves! O goddesses of the forest!
  3. If you would grant me the words Do not fear, and I, your servant,
  4. were saved by it, would that be any shame to you? Tell me!

What the poem says

Cītai goes on appealing to the clouds, the groves and the spirits of the forest. Clouds hang over the hills and sky, groves rise high, and forest deities know all that happens in the woods, so surely they know how Irāmaṉ is grieving at losing her, or where he is.

She begs them to comfort her with a word of reassurance, asking whether saving her would bring them any dishonour. The word for hero used of Irāmaṉ here is one the poet applies to him elsewhere too.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' ceñ cēvakaṉār nilai nīr terivīr;
mañcē! poḻilē! vaṉa tēvataikāḷ!
' añcēl ' eṉa nalkutirēl, aṭiyēṉ
uñcāl, atu tāṉ iḻivō? uraiyīr! ''