கம்பராமாயணம் 3481 · ஆரணிய 8.79
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நிருதாதியர் வேர் அற - அரக்கர் முதலிய கொடியவர் அடியோடு அழிய; நீல்முகில் போல் சர தாரைகள் வீசினிர் சார்கிலிரோ - நீல மேகம் போல் அம்பு மழை பொழிந்து இங்கு வந்து சேரமாட்டீரா? வரதா - அடைக்கலமாக வந்தவர்க்கு அருளும் இராமனே!; இளையோய் - இராமனின் தம்பியாம் இலக்குவனே!; மறு ஏதும் இலாப் பரதா - குற்றம் ஒன்றும் இல்லாத பரதனே!; இளையோய் - பரதனை நீங்காத தம்பியாம் சத்துருக்கனே!; பழி பூணுதிரோ - என்னை இந்த ஆபத்திலிருந்து காக்காமலிருந்து பழியை அடைவீர்களோ?
நிருதாதியர் - அரக்கர் தலைவனாம் இராவணன் முதலானோர் எனவுமாம். இராமனை நீல முகிலுக்கு ஒப்பிட்டது நிறத்தாலும் அம்பு சொரியும் ஆற்றலாலும் என்க. 'வரதன்' என்ற வழக்கு பாலகாண்டத் திரு அவதாரப் படலத்தில் 'வரதனும் இளவலும் என மருவினரே' (307) என வந்துளது. கடுஞ் சொல் கூறி வனத்தில் இராமனைத் தேட இலக்குவனை விடுத்ததையும் மறந்து 'இளையோய்' என்கிறாள். கைகேயி வரத்தால் பெற்ற நாட்டை மீண்டும் இராமனுக்கே அளிக்கக் காட்டிற்கு வந்து கூற இராமன் மறுக்கவே அவன் பாதுகையைப் பெற்று நந்திக் கிராமத்திலிருந்த பரதனை 'மறுஏதும் இலாப் பரதா' என்கிறாள். பரதனை நீங்காத சத்துருக்கனையும் 'இளையோய்' என்றாள். இத்தகைய குற்றமற்ற நால்வரும் தனக்கேற்பட்ட தீங்கை நீக்க வராததால் பழி பூணுவார்களோ என அஞ்சுகிறாள் சீதை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- To tear out the demons and their kind by the root, like dark blue clouds
- will you not come, pouring down torrents of arrows?
- O giver of grace! O younger one! O Paratan,
- free of every stain! O younger one! Will you take on this disgrace?
What the poem says
Cītai cries out to all four brothers. Irāmaṉ, the giver of grace to all who seek refuge, is likened to a dark rain cloud, both for his colour and for the rain of arrows he can pour down. She calls on Ilakkuvaṉ, forgetting the harsh words with which she had just sent him off to look for Irāmaṉ, and on the blameless Paratan, who had come to the forest to give the kingdom back, and when refused took Irāmaṉ's sandals and lived at Nantikkirāmam. The second younger one is Cattirukkaṉaṉ, who never leaves Paratan's side.
Her fear is that these four faultless men will be shamed for failing to come and save her.