கம்பராமாயணம் 348 · பால 7.18

Section பால காண்டம் / 7. தாடகை வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நோக்கினன் அவர் முகம், நோக்க நோக்கு உடை
கோக் குமரரும் அடி குறுக, நான்முகன்
ஆக்கிய விஞ்சைகள் இரண்டும் அவ் வழி
ஊக்கினன்; அவை அவர் உள்ளத்து உள்ளினார்.

பொருள் · Meaning in Tamil

அவர் முகம் நோக்கினன் - (விசுவாமித்திர முனிவன்) அந்த அரசகுமரர்களுடைய முகங்களைப் பார்த்தான்; நோக்க, நோக்குடைக் கோக்குமரரும் - அவ்வாறு பார்க்கவே, அக்குறித்த பார்வையில் நோக்கமுடைய அவ்வரச குமாரர்களும்; அடிகுறுக - முனிவரின் பாதங்களை வணங்க; நான்முகன் ஆக்கிய விஞ்சைகள் இரண்டும் - பிரம தேவனால் செய்யப்பட்டுத் தனக்களிக்கப்பட்ட இரண்டு அரிய வித்தைகளை; அவ்வழி ஊக்கினன் - அப்பார்வையின் வழியே அவர்கள் மனத்தில் பதியுமாறு ஊக்குவித்தான்; அவை அவர் உள்ளத்து உள்ளினார் - அவைகளை அக்குமரர் தமது உள்ளத்தில் நினைத்தனர்.

நோக்கின் வழி ஊக்கினன் என்பது நயன தீட்சை எனப்படும்.

நோக்கு: நோக்கம் 'நோக்குடைக் கோக்குமரர் அடிகுறுக' என்றது, முனிவரது மனக் குறிப்பை உணர்ந்த குமாரர்கள் அவரை அடைந்து அருள் செய்யுமாறு வணங்கி நின்றனர் எனும் கருத்துடையதாகும். நான் முகன் ஆக்கிய விஞ்சைகள் இரண்டு, பலை அதிபலை என்ற மந்திரங்களாகும். இவைகளை முனிவருக்குச் சொன்னது பிரமன் என்பது கம்பர் கருத்து. விஞ்சை: வித்தை. ஊக்குதல்: செலுத்துதல். உள்ளுதல் - நினைத்தல் பூவின் மெல்லியர் வருந்துவர் என நினைத்த முனிவர் இராம இலக்குவர்களைப் பார்க்க, அவர்கள் முனிவனது மனக்கருத்தை அறிந்து அடிகுறுக, நான்முகன் ஆக்கிய விஞ்சைகள் ஊக்கினர். அவற்றை அவர் உள்ளத்து உன்னினர் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He looked at their faces; as he looked, the royal princes, who understood that look,
  2. came near and bowed at his feet; and the two sacred sciences
  3. that the four-faced Brahmā had made, he passed into them by that very path,
  4. and they held them in their hearts.

What the poem says

The sage glances at the princes, and they read his thought and come to bow at his feet. Through that gaze alone he transmits to them two mantras, known as Balā and Atibalā, which Kampaṉ says Brahmā himself had given to Vicuvāmittiraṉ.

Initiation by look alone (nayana-tīkṣai) is a recognised form of spiritual transmission. The princes simply fix the mantras in their minds.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nōkkiṉaṉ avaṉ mukam, nōkka nōkkuṭaik
kōk kumararum aṭi kuṟuka, nāṉmukaṉ
ākkiṉa viñcaikaḷ iraṇṭum av vaḻi
ūkkiṉaṉ; avai avar uḷḷattu uḷḷiṉār.