கம்பராமாயணம் 349 · பால 7.19

Section பால காண்டம் / 7. தாடகை வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உள்ளிய காலையின் - அவ்வாறு அவ்விருவரும் அம்மந்திரங்களை எண்ணியபோது; ஊழித் தீயையும் எள்ளுறு - ஊழிக் காலத்துப் பெரு நெருப்பையும் இகழக் கூடியதான; கொழுங்கனல் எரியும் வெஞ்சுரம் - மிகுந்த நெருப்புப் பற்றி எரியும் வெம்மை மிகுந்த அப்பாலைவனம்; தெள்ளு தண்புனலிடைச் சேறல் ஒத்தது - தெளிந்த குளிர்ந்த நீரினிடையே செல்லுதல் ஒத்திருந்தது (அப்போது); வள்ளலும் முனிவனை வணங்கி கூறுவான் - இராமபிரானும் அம்முனிவனை வணங்கிக் கூறலுற்றான்.

காலை: காலம். ஊழி: யுகமுடிவு. எள்ளுறு இதில் “உறு” துணைவினை. கொழுமை-கனல்: கொழுங்கனல்: பண்புத்தொகை. சேறல்: செல்லுதல் தெள்ளுதண்: 'உ' சாரியை புனலிடை: “இடை” ஏழனுருபு. வெம்மைச்சுரம்: வெஞ்சுரம் (பண்புத் தொகை). முனிவர் கற்றுத் தந்த மந்திரங்களை இராம, இலக்குவர் மனத்தில் எண்ணினர் அவ்வாறு எண்ணியபோது, ஊழித்தீயையும் இகழும்படியான மிகுந்த வெம்மையை உடைய அப்பாலைவனம் குளிர்ந்த நீரிலே செல்லுதலைப் போன்ற தாயிற்று என்பது குறிப்பு. மந்திரத்தின் ஆற்றலால் பாலையின் கொடுமை தோன்றவில்லை என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The moment they meditated on them, the fierce wasteland, burning with a fire so rich
  2. that it scorns even the fire at the end of the age,
  3. became like walking through clear, cool water.
  4. Then the generous prince bowed to the sage and spoke.

What the poem says

As soon as Irāmaṉ and Ilakkuvaṉ call the mantras to mind, the desert, hotter than the fire that ends the world, feels to them like wading through cool clear water. The power of the mantras takes away all the land's cruelty.

Refreshed, Irāmaṉ, called here simply "the generous one," bows to the sage and begins to question him about this place.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uḷḷiya kālaiyiṉ ūḻit tīyaiyum
eḷḷuṟu koḻuṅ kaṉal eriyum veñ curam
teḷḷu taṇ puṉaliṭaic cēṟal ottatu
vaḷḷalum muṉivaṉai vaṇaṅkik kūṟuvāṉ.