கம்பராமாயணம் 350 · பால 7.20
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சுழிபடுகங்கை அம்தொங்கல் மோலியான் - சுழித்து வரும் நீர்ப் பெருக்கை உடைய கங்கையும், கொன்றை மாலையும் அணிந்த முடியை உடைய சிவபிரானது; விழிபட வெந்ததோ - நெற்றிக்கண் பட்டு இப்படி வெந்துபோனதோ?; வேறு தான் உண்டோ - அல்லது வேறு காரணம் ஏதேனும் உண்டோ?; பழிபடா மன்னவன் - பழிச்சொல் படாத மன்னனாகிய எம் தந்தை; பரித்த நாட்டின் ஊங்கு - நல்லாட்சி செய்யும் நாட்டிலும் இவ்விடம்; அழிவதென் காரணம் - இப்படி அழிந்து போதல் என்ன காரணமோ?; அறிஞ! கூறு என்றான் - யாவுமறிந்த பெரியோய்! சொல்லுக என்றான்.
அழி: பகுதித் தொழிற்பெயர். தொங்கல்: மாலை (தொங்குமாறணிவது). மோலி: மகுடம் (இங்குச் சடைமுடி). “விழிபட வெந்ததோ? வேறுதானுண்டோ?” என்றது ஐயவணி. பழிபடா: பழிக்காளாகாத. அறிஞ: அண்மைவிளி. ஊங்கு: முன்புள்ள இடத்தை உணர்த்தும். “உப்பக்கம்” என்பர் வள்ளுவர் அது போன்றது என்க. “விழி” எனக் கூறினும் இங்கு நெற்றிக்கண்ணை உணர்த்தும். தீக்கண் அதுதானே!
ஆங்கிலம் · English translationAI
Translation
- Was it burned when the eye fell on it of the god whose crown wears the whirling Gaṅgā as a lovely garland?
- Or is there some other cause?
- Within the land that a king free of blame protects,
- what is the reason this place lies ruined? Tell me, wise one, he said.
What the poem says
Irāmaṉ asks Vicuvāmittiraṉ about the desert. Was it burned by the fiery third eye of Civaṉ, who wears the swirling Gaṅgā in his matted hair like a garland? Or is there some other reason?
He is puzzled because this land lies within the realm of his father, a king whom no one can blame, and well-governed lands are not supposed to fall into such ruin. The pair of questions is a figure of doubt.