கம்பராமாயணம் 3483 · ஆரணிய 8.81
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முந்தும் சுனைகாள் - என் முன்னே தோன்றும் மலை ஊற்றுக்களே!; முழை வாழ் அரிகாள் - மலைக் குகையில் வாழும் சிங்கங்களே!; இந்தந் நிலனோடும் - நானிருந்த இந்தத் தரையோடும்; எடுத்த கை நால் ஐந்தும் - பெயர்த்தெடுத்த இருபது கைகளையும்; தலைபத்தும் - பத்துத் தலைகளையும்; அலைந்துலையச் சிந்தும்படி கண்டு சிரித்திடுவீர் - (இராமன் அம்புகளால்) அலைவுற்றுச் சிதறி அழியச் சிந்திவிடுவதைப் பார்த்து நீங்கள் சிரிப்பீர்கள். சுனை - மலையிலுள் நீர் நிலையுமாம்.
தனக்கேற்பட்ட அவலத்தில் எதிர்ப்படும் சுனைகளையும் முழையில் வாழும் சிங்கங்களையும் பார்த்து, இராவணன் அழிவதைக் கண்டு சிரியுங்கள் என்கிறாள் சீதை.
தனக்குத் தீங்கிழைத்த இருபது கையும் பத்துத் தலையும் சிதற வேண்டும் என எண்ணுகிறாள் சீதை.
இந்தந் நிலனோடும் என பிற அடிகளிற்கேற்ப எதுகை பெற ஒற்று மிகுந்து வந்துளது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- O springs that rise before me! O lions that live in caves!
- The four times five arms that lifted me with this very ground,
- and the ten heads, tossed about and ruined,
- you shall see them scattered, and you shall laugh.
What the poem says
Facing the mountain springs and the lions in their caves, Cītai foretells Irāvaṇaṉ's end: the twenty arms that tore her up together with the earth, and his ten heads, will one day be scattered by Irāmaṉ's arrows, and these witnesses will laugh to see it.
In her helplessness she longs for the very limbs that wronged her to be destroyed. The doubled consonant in this very ground is there to keep the rhyme with the other lines.