கம்பராமாயணம் 3491 · ஆரணிய 8.89
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(சடாயுவின் சிறகில் இருந்து வீசும் பெருங்காற்றினால்) மரமும் - மரங்களும்; சாகை வன் தலையொடு தாழ - கிளைகளோடு வலிய தலைப்புறத்துடன் (பூமியில்) படியவும்; மேல் மேகமும் - மேல் இடத்தில் உள்ள மேகங்களும்; விண்ணின் மீச் செல்ல - வானத்தின் மேல் ஒதுங்கிப் போகவும்; மீமிசை மாக வெங் கலுழன் ஆம் வருகின்றான் என - மிக உயர்ந்த வான் வழியில் பெருமை உடைய கொடிய கருடன் வருகின்றான் என்று எண்ணி; நாகமும் படம் ஒளித்து - நாகங்களும் படத்தை ஒடுக்கிக்கொண்டு; ஒதுங்கி நையவே - மறைந்து பதுங்கி வருந்த.
சடாயுவின் சிறகில் இருந்து வரும் பெருங்காற்றால் மரங்கள் கிளைகளோடும் தலைப்புறத்துடனும் விழவும், வானத்தில் செல்லும் மேகம் மேலும் மேலே செல்லவும், கருடன் வருகின்றான் எனப் பாம்புகள் படம் குறைந்து நையவும், வந்தனன் என்க. சாகை - கிளை, மாகம் - பெருமை, ஒளித்து - ஒடுக்கி, கலுழன் - கருடன்.
மீமிசை - ஒருபொருட் பன்மொழி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As trees bowed down with their branches and strong crowns, and above
- the clouds were driven higher up the sky, and, high overhead,
- thinking, It is the great fierce Garuḍa coming!,
- the serpents hid their hoods and shrank away in terror,
What the poem says
Still building up the picture of Caṭāyu's approach: the wind of his wings flattens trees with their branches and tops, pushes the clouds higher into the sky, and makes the serpents fold their hoods and cower, believing that Garuḍa, the great divine eagle and enemy of snakes, is swooping down on them.