கம்பராமாயணம் 3492 · ஆரணிய 8.90
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
யானையும் யாளியும் முதல யாவையும் - யானைகளும் யாளிகளும் முதலாகிய எல்லா மிருகங்களும்; கான் நெடு மரத்தொடு - காட்டில் உள்ள மரங்களும், தூறு கல் இவை - புதர்களும் கற்களும் ஆகிய இவையும்; இரு சிறை விசையின் மேல் நிமிர்ந்து ஏறலால் - இரண்டு சிறகுகள் வீசும் காற்றின் (வேகத்தால்) (நிலை கெட்டு) மேல் ஏறி வானத்தில் நிரம்புதலால்; வானமும் கானமும் மாறுகொள்ளவே - ஆகாயமும் காடுகளும் ஒன்றொடு ஒன்று மாறாடி நிற்கவும்... வந்தனன்"
யானை யாளி முதலிய மிருகங்களும் காட்டில் உள்ள மரங்களும், புதர்களும், கற்களும் சடாயுவின் இரு சிறகுகள் வீசும் காற்றின் வேகத்தால் நிலை கெட்டு ஆகாயமும் காடுகளும் ஒன்றொடு ஒன்று மாறு கொண்டு நின்றன என்றவாறு. தூறு - புதர், முதல - குறிப்புப் பெயரெச்சம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As elephants, yāḷis and every other creature,
- with the tall trees of the forest, the thickets and the stones,
- rose up high, carried by the force of his two wings,
- so that sky and forest changed places,
What the poem says
The gale of Caṭāyu's wings lifts elephants, yāḷis (mythical lion-like beasts), trees, bushes and rocks into the air, so that the sky fills with the forest and the sky and the forest seem to have swapped places. The sentence still waits for its main verb, which comes two verses on.