கம்பராமாயணம் 3493 · ஆரணிய 8.91

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''

பொருள் · Meaning in Tamil

உத்தமன் தேவியை - கல்யாண குணங்கள் நிறைந்த உத்தமனாகிய இராமனது மனைவியை; உலகொடு ஓங்கு தேர் வைத்தனை - நிலத்தொடு பெயர்த்து உயர்ந்த தேரில் வைத்தவனாய்; எங்கு ஏகுவது - நீ எங்குப் போக முடியும்; வானினோடு இத்தனை திசையையும் - வானத்தோடு (மற்றுமுள்ள) இத்தனை திசைகளையும்; ஈண்டு மறைப்பென் எனா - இப்பொழுதே மறைத்து விடுவேன் என்று சொல்லி; பத்திரச் சிறைகளை விரிக்கும் பண்பினான் - பாதுகாப்புச் செய்ய உரிய) சிறகுகளை விரித்துப் பரப்புகிற உயர் பண்பு உடையவனாய் எருவையின் மன்னன் வந்தனன்" எனப் பொருள் முடிக்க.

உத்தமன் தேவியை உலகொடு பெயர்த்துக் கொண்டு தேரில் வைத்து நீ போவது எங்கே' என்று கூறி, தான் வானையும் திசைகளையும் இப்போதே மறைப்பவன் போலத் தன் பாதுகாப்பான சிறகுகளை விரித்தபடி சடாயு வந்தனன் என்க. உலகொடு என்பதைத் தேருக்கு ஆக்கி உலகத்தோடொப்ப ஓங்கு தேர் "கண்டான் நிலம்; யோசனை கீழொடு மேல்" (3390), "கொண்டான் உயர் தேர் மிசை" (939/) என்றும், "தீண்டுற்றிலன் என்று உணர் சிந்தையினான்." (3409) என்றும் முன்னும் பின்னும் கவிஞர் குறிப்பிட்டுள்ளதால் ஈண்டு நிலத்தொடு என்பதே பொருந்தும் என்க. பத்திரம் - பாதுகாப்பு, வைத்தனை - முற்றெச்சம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Where are you going, having set the wife of the noblest of men
  2. on your towering chariot, earth and all? Here and now, together with the sky,
  3. I will blot out all these directions!, he said,
  4. and he, whose nature was to protect, spread wide his sheltering wings.

What the poem says

Caṭāyu challenges Irāvaṇaṉ: where does he think he can go with the wife of the noblest of men, Irāmaṉ, set on his chariot along with the very ground she stood on? Caṭāyu threatens to block out the whole sky and every direction, and spreads his protective wings wide.

The poet has already said that Irāvaṇaṉ dug up the earth around Cītai without touching her, so with the earth is the right reading here rather than a chariot as tall as the world.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' uttamaṉ tēviyai, ulakoṭu ōṅku tēr
vaittaṉai ēkuvatu eṅku? vāṉiṉōṭu
ittaṉai ticaiyaiyum maṟaippeṉ īṇṭu '' eṉā
pattirac ciṟaikaḷai virikkum paṇpiṉāṉ.