கம்பராமாயணம் 3494 · ஆரணிய 8.92

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வந்தனன் எருவையின் மன்னன் ; மாண்பு இலான்
எந்திரத் தேர் செலவு ஒழிக்கும் ஈட்டினால் ,
சிந்துரக் கால் சிரம் செக்கர் மூடிய
கந்தரக் கயிலையை நிகர்க்கும் காட்சியான் .

பொருள் · Meaning in Tamil

மாண்பு இலான் - நல்ல பண்புகள் இல்லாதவனாகிய இராவணனது; எந்திரத்தேர் - எந்திரங்கள் பொருத்தப்பட்ட தேரின்; செலவு ஒழிக்கும் - செல்லுதலைத் தடுக்கும்; எண்ணினான் - கருத்தினைக் கொண்டவனும்; சிந்துரக் கால்சிரம் - சிந்தூரம் போல் மிகச் சிவந்த கால்களையும் தலையையும்; செக்கர் சூடிய கந்தரம் - செவ்வானத்தின் நிறத்தைக் கொண்ட கழுத்தினையும் உடையவனாக; கயிலையை நிகர்க்கும் காட்சியான் - கைலாய மலையை ஒக்கின்ற தோற்றத்தை உடையவனாய்; எருவையின் மன்னன் வந்தனன் - கழுகுகளுக்கு அரசனாகிய சடாயு, (இராவணனுக்கு எதிரில்) வந்து சேர்ந்தான்.

சடாயு இராவணன் தேர் செல்லுதலைத் தடுக்கும் கருத்துடன் சிவந்த கால்களோடும் தலையோடும் செக்கர் வானம் போன்ற கழுத்தோடும் கைலாய மலையை ஒக்கின்ற தோற்றத்தோடும் இராவணன் எதிரில் வந்தனன். எந்திரம் - பொறி; சக்கரம் என்றும் கூறுவர். சிந்துரம் - செந்தூரம் சிவப்பு நிறம் உடையது. கந்தரம் - கழுத்து. என்னும் அவ்வேலையின் கண் சொல்லன், கண்ணன், துண்டத்தன், மெய்யன், கிரிகள் பூழியின் உதிர, ஆழியும் உலகும் ஒன்றாய் அழிதர, இரு சிறை ஊதை மோத, மரமும் தாழ, மேகம் விண்ணின் மீச் செல்ல, நாகம் ஒதுங்கி நைய, வானமும் கானமும் மாறு கொள்ள, திசையையும் மறைப்பென் எனா, எண்ணினான். காட்சியான் - எருவையின் மன்னன் வந்தனன் எனக் குளகமாக வந்த ஆறு பாடல்களுக்கும் முடிபு கொள்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The king of the vultures came, resolved to stop
  2. the course of the machine-built chariot of that man without honour,
  3. his feet and head red as vermilion, his neck dyed with the glow of sunset,
  4. a sight like Mount Kailāsa itself.

What the poem says

Here the six-verse sentence finally reaches its verb: the king of the vultures came. Caṭāyu arrives in front of Irāvaṇaṉ, determined to halt the chariot, which is fitted with machinery or, as some read it, wheels.

His feet and head are vermilion red, his neck the colour of the evening sky, and his huge pale body looks like Mount Kailāsa, so that the white mountain touched with red at sunset is the picture the poet leaves us with.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vantaṉaṉ eruvaiyiṉ maṉṉaṉ; māṇpu ilāṉ
entirat tēr celavu oḻikkum eṇṇiṉāṉ,
cinturak kāl ciram cekkar cūṭiya
kantarak kayilaiyai nikarkkum kāṭciyāṉ.