கம்பராமாயணம் 3495 · ஆரணிய 8.93

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 '' ''

பொருள் · Meaning in Tamil

ஆண்டு உற்ற - அந்த இடத்திற்கு வந்த; அவ் அணங்கினை - அந்தச் சீதையை; அஞ்சல் எனா - (நீ) அஞ்சாதே என்று (சடாயு) கூறி; தீண்டுற்றிலன் என்று உணர்சிந்தையினான் - (இராவணன்) அவளைத் தொட்டான் இல்லை என்று உணர்ந்த மனத்தினை உடையவனாய்; மூண்டு உற்று எழு வெங்கதம் முற்றிலனாய் - பொங்கி எழுகின்ற கொடிய சினம் முதிராதவனாய்; மீண்டுற்று - மீண்டும்; உரையாடலை மேயினன் - (இராவணனை நோக்கி) உரையாடலைத் தொடங்கினான். ஆல் - ஈற்றசை.

சீதைக்கு 'அஞ்சல்' என அபயம் கூறிய சடாயு, இராவணன் அவளைத் தீண்டவில்லை என்பதை உணர்ந்து சினத்தை அடக்கிக்கொண்டு அவனை நோக்கிப் பேசத் தொடங்கினான். தீண்டுற்றிலன் - தீண்டினான் இல்லை, கதம் - சினம். மீண்டுற்று - மீண்டும். இப் படலத்தின் முதல் பாடலில் "எங்கு அடா போவது" "நில்நில் என்று இடித்த சொல்லன்" என்று சடாயு இராவணனை நோக்கிக் கூறியதாக வந்துள்ளதால் இங்குச் சடாயு கூறுவதை மீண்டுற்று உரையாடலை மேயினனால் என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Arriving there, he said to that lady, Do not fear;
  2. and knowing in his mind that the other had not touched her,
  3. he held back the fierce anger that was rising and flaring in him,
  4. and turned again to speak with him.

What the poem says

Caṭāyu first reassures Cītai with the words Do not fear, the traditional promise of protection. Realising that Irāvaṇaṉ has not laid a hand on her, he keeps his rising fury in check and, rather than attacking at once, turns to reason with the abductor.

He speaks again because he has already shouted his challenge, Stop, stop, in the opening verse of the canto.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṇṭu uṟṟu av aṇaṅkiṉai '' añcal '' eṉā
tīṇṭuṟṟilaṉ eṉṟu uṇar cintaiyiṉāṉ,
mūṇṭu uṟṟu, eḻu veṅ katam muṟṟilaṉāy,
mīṇṭuṟṟu, uraiyāṭalai mēyiṉaṉāl.