கம்பராமாயணம் 3496 · ஆரணிய 8.94

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''

பொருள் · Meaning in Tamil

கிளையோடும் கெட்டாய் - (உன்) சுற்றத்தவருடன் கெட்டுப் போனாய்; நின் வாழ்வை எலாம் சுட்டாய் - நினது வாழ்வு முழுவதையும் எரித்து அழித்துக் கொண்டாய், நீ இது என்னை தொடங்கினை? - நீ (இத்தகு தகுதியில் செயலை) ஏன்? தொடங்கினாய்; பட்டாய் எனவே கொடு - (நீ) இறந்து பட்டாய் என்றே எண்ணிக் கொண்டு; பத்தினியை விட்டு ஏகுதி - இராமனது (கற்புக் கொழுந்தாம்) மனைவியை விட்டுச் செல்வாய்; விளிகின்றிலையால் - (அவ்வாறு செய்தால்) இறக்க மாட்டாய்.

உன் செயலால் உன் உறவினரும் நீயும் முழுதும் அழிந்துபடுவீர்கள். எனவே, கற்பின் கனலியை விட்டு உயிர் உய்ந்து போக என்றவாறு. சுட்டாய் - எதிர்காலம் இறந்த காலமாய் வந்த காலவழுவமைதி. எலாம் - இடைக்குறை. கொடு - இடைக்குறை, ஆல் இரண்டும் அசை. இப்பாடலில் சடாயு இராவணனின் அழிவையும் சுற்றத்தவர் அழிவையும் கூறி அச்சம் உண்டாக்கி அவன் செயலைத் தடுக்க முனைதலை உணர்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. You are ruined, you and all your kin! You have burnt up
  2. your whole life! Why did you begin this?
  3. Think of yourself as already dead, and go, leaving
  4. this faithful wife behind; then you will not die.

What the poem says

Caṭāyu speaks to Irāvaṇaṉ. By this deed he has already destroyed himself and his whole clan; the past tense is used for what is certain to happen. Caṭāyu tries to frighten him out of it: let him count himself as good as dead, give up Irāmaṉ's chaste wife, whose virtue is like fire, and leave, and so escape with his life.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' keṭṭāy! kiḷaiyōṭum niṉ vāḻvai elām
cuṭṭāy; itu eṉṉai toṭaṅkiṉai? nī
paṭṭāy eṉavē koṭu, pattiṉiyai
viṭṭu ēkutiyāl! viḷikiṉṟilaiyāl. ''