கம்பராமாயணம் 3514 · ஆரணிய 8.112

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1புண்ணில் புது நீர் பொழியப் பொலி புள்ளின் வேந்தன் ,
மண்ணில் , கரனே முதலோர் உதிரத்தின் வாரி
கண்ணிக் கடல் என்று நுகர்ந்தது கான்று , மீள
விண்ணில் பொலிகின்றது ஒர் வெள் நிறம் மேகம் ஒத்தான் .

பொருள் · Meaning in Tamil

புண்ணின் - (தன் உடம்பில் அம்புகள் பட்டதால் ஏற்பட்ட) புண்ணில் இருந்து; புதுநீர் பொழியப் பொலி - புதுக் குருதி மிகுதியாக வடிந்தும் பொலிவு மாறாத; புள்ளின் வேந்தன் - பறவைகளுக்கு அரசனாகிய சடாயு; மண்ணில் கரனே முதலோர் உதிரத்தின் வாரி - நிலத்தில் பெருகி ஓடிய கரன் முதலிய அரக்கர்களது குருதி வெள்ளத்தை; கண்ணில் கடல் என்று கவர்ந்து - பெருமை உடைய கடல் என்று கருதிப் பருகிய (வெண் மேகம்); அது கான்று மீள - அந்நீரைப் பின்பு சொரிந்து; விண்ணில் பொலிகின்றது - வானத்தில் அழகு பெற விளங்குகிற; ஓர் வெண் நிற மேகம் ஒத்தான் - ஒப்பற்ற வெண்மை நிறம் உடைய மேகத்தை ஒத்திருந்தான்.

கடல் நீரை முகந்து வெண்மேகம் கருமேகமாகி மழை பெய்த பிறகு மீண்டும் வெண் மேகம் ஆதல் இயல்பு. இறந்தவர்களின் குருதியைப் பருகும் வாழ்க்கை உள்ள கழுகுகளுக்கு அரசனாகிய சடாயு வெண்மை நிறம் உடையவன். கண் - பெருமை.

காலுதல் - வெளியிடுதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With fresh blood streaming from his wounds, the splendid king of birds
  2. was like a white cloud that, having drunk on earth the flood of blood
  3. of Karaṉ and the rest, taking it for the wide sea, and poured it out again,
  4. now shines once more in the sky.

What the poem says

Caṭāyu, fresh blood pouring from his wounds, still looks magnificent. The poet compares him to a white cloud that has drunk up the river of blood shed by Karaṉ and his demons, mistaking it for the ocean, has rained it back down, and now gleams white in the sky again.

A cloud draws up sea water, darkens, pours rain and turns white again; and vultures, whose king Caṭāyu is, live on the blood of the dead, so the image fits on both counts.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1puṇṇil putu nīr poḻiyap poli puḷḷiṉ vēntaṉ,
maṇṇil, karaṉē mutalōr utirattiṉ vāri
kaṇṇil kaṭal eṉṟu kavarntatu kāṉṟu, mīḷa
viṇṇil polikiṉṟatu ōr veṇ niṟa mēkam ottāṉ.