கம்பராமாயணம் 3515 · ஆரணிய 8.113
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஒத்தான் - வெண் மேகத்தை ஒத்தவன் ஆகிய சடாயு; உடனே உயிர்த்தான் உருத்தான் - உடனடியாகப் பெருமூச்சு விட்டுச் சினந்து; அவன் தோள் பத்தோடு பத்தின் நெடும்பத்தியில் - அந்த (இராவணனது) தோள்கள் ஆகிய இருபதின் வரிசையில்; தத்தி - பாய்ந்து ஏறி; மூக்கால் கொத்தா - மூக்கினால் கொத்தியும்; நகத்தால் குடையா - நகத்தால் பிறாண்டியும்; சிறையால் புடையா - சிறகுகளால் அடித்தும்; முத்து ஆர மார்பில் - (அவனது) முத்து மாலை அணிந்த மார்பில் விளங்கிய; கவசத்தையும் மூட்டு அறுத்தான் - கவசத்தையும் மூட்டுவாய் அறும்படி செய்தான்.
அம்புபட்ட சடாயு, உயிர்த்து, உருத்து, இருபது தோள்களில் ஏறி, கொத்திக் குடைந்து புடைத்து அவனது மார்பில் விளங்குகிற கவசத்தின் மூட்டுவாய் அறும்படி செய்தான் என்க. ஒத்தான் - முன்பாடலில் கூறிய படி வெண் மேகத்தை ஒத்தவன் என்றபடி. பத்தி - வரிசை. தத்தி - பாய்ந்து ஏறி, மூட்டறுத்தல் - இணைப்பு வாய்நெகிழும் படி செய்தல். கொத்தா, குடையா, புடையா - செய்யா என்னும் வாய்பாட்டு உடன்பாட்டு வினையெச்சங்கள். முந்தைய பாடலும் இதுவும் அந்தாதித் தொடையில் அமைந்து உள்ளமை காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He who was like that cloud at once drew a great breath and flared up; onto
- the long row of his twenty shoulders he leapt, and with his beak
- pecking, with his talons gouging, with his wings battering,
- he split apart at the joints even the armour on the pearl-garlanded chest.
What the poem says
Wounded but undaunted, Caṭāyu, the white cloud of the last verse, gathers his breath and his rage and hops along the row of Irāvaṇaṉ's twenty shoulders, pecking, clawing and beating with his wings, until the armour on the demon's pearl-hung chest splits at its seams. Again the verse picks up the last words of the one before.