கம்பராமாயணம் 3516 · ஆரணிய 8.114
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அறுத்தானை - (தன்) கவசத்தை மூட்டு அறுத்த சடாயுவினுடைய; தட மார்பில் - பரந்த மார்பில்; அரக்கனும் ஐம்பதொடு ஐம்பது அம்பு செறித்தான் - அரக்கனாகிய இராவணனும் நூறு அம்புகளை அழுந்துமாறு எய்தான்; செறித்தலும் - அவன் அவ்வாறு (அம்புகளைப்) பதியுமாறு அழுத்திய அளவில்; தேவர் அஞ்சி வெறித்தார் - தேவர்கள் அஞ்சித் திகைத்தார்கள்; வெறியாமுன் - (அவர்கள் அவ்வாறு) திகைப்பதற்கு முன்பே; பறவைக்கு இறை - (கழுகு என்னும்) பறவைகளுக்கு அரசன் ஆகிய சடாயு; விண்ணவர் பண்ணை ஆர்ப்ப - தேவர் கூட்டம் மகிழ்ச்சிப்பேரொலி செய்ய; இராவணன் வில்லைப் பல்லால் பறித்தான் - இராவணனது வில்லைத் (தன்) அலகினால் இழுத்துப் பிடுங்கினான்.
தன் கவசத்தைப் பிளந்த சடாயுவின் மீது இராவணன் நூறு அம்புகளை எய்தான். அது கண்டு வானவர் திகைத்தனர். உடனே சடாயு பாய்ந்து தேவர்கள் மகிழ்ச்சிப் பேரொலி செய்ய அவனது வில்லைப் பறித்தான். வெறித்தல் - திகைத்தல், பல் - ஈண்டு மூக்கு, பண்ணை - கூட்டம், அறுத்தான் - வினையாலணையும் பெயர். தடமார்பு - உரிச்சொல் தொடர். முந்தைய பாடலும் இதுவும் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளமை காண்க. சடாயு இராவணன் போர் தொடர்ந்து இடையீடின்றி நடந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Into the broad breast of him who had split it, the demon drove
- fifty and fifty arrows; at that the gods, afraid,
- stood stunned; but before they could even be stunned, the king of birds
- wrenched Irāvaṇaṉ's bow away with his beak, as the hosts of heaven roared.
What the poem says
Irāvaṇaṉ answers by driving a hundred arrows deep into Caṭāyu's chest, and the gods watching are struck with dread. But before they can take it in, Caṭāyu has lunged and torn Irāvaṇaṉ's bow from his grasp with his beak, and the gods shout for joy.
The fight runs on without a break, each verse again taking up the last word of the one before.