கம்பராமாயணம் 3517 · ஆரணிய 8.115

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எல் இட்ட - ஒளி பொருந்திய; வெள்ளிக் கயிலைப் பொருப்பு - வெள்ளி போல் (வெண்ணிறம்) விளங்கும் திருக் கைலாய மலையை, ஈசனோடும் - சிவபிரானோடு; மல் இட்ட தோளால் எடுத்தான் - (தன்) வலிமை மிக்க தோள் ஆற்றலால் எடுத்தவனாகிய (இராவணனது); சிலை வாயின் வாங்கி - வில்லை மூக்கால் பறித்துக் (கௌவி); வில் இட்டு உயர்ந்த நெடுமேகம் எனப் பொலிந்தான் - இந்திரவில் விளங்க உயர்ந்த பெரிய மேகம் என்னுமாறு (அச்சடாயு) விளங்கினான்; அவன் தோள் வலி - (எனவே) அச்சடாயுவின் தோளாற்றலை; சொல் இட்டுச் சொல்ல வல்லார் யார் உளர் - சொற்களைக் கொண்டு சொல்லி (விளக்க) வல்லவர்கள் யாவர் உளர். ஒருவருமில்லை என்பதாம்.

வெள்ளியங்கிரியினை விடையின் பாகனோடு அள்ளிய தோள்வலி உடைய இராவணனது வில்லைப் பறித்து வாயில் கவ்விக் கொண்டு வானில் நீண்ட மேகம் போல் விளங்கிய சடாயுவின் தோளாற்றலைச் சொற்களால் யாரால் சொல்ல முடியும்? முடியாது என்றபடி, எல் - ஒலி, மல் - வலிமை. மற்போர் செய்து பெற்ற வலிமை எனினும் பொருந்தும். தோள் வலி - பறவைக்குத் தோள் இன்மையால் உடல் வலிமை எனக்கொள்ளலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Taking in his beak the bow of him whose wrestler's shoulders had lifted
  2. the shining silver mountain Kailāsa with its Lord upon it,
  3. he shone like a tall cloud with a rainbow set across it;
  4. who is there able to put into words the strength of his shoulders?

What the poem says

Irāvaṇaṉ once lifted Mount Kailāsa, with Śiva himself on it. Caṭāyu has snatched that same hero's bow and holds it in his beak, and he looks like a towering white cloud with a rainbow across it.

Who could ever describe such strength in words? Since a bird has no shoulders, the strength of his shoulders here means the strength of his body.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1el iṭṭa veḷḷik kayilaip poruppu, īcaṉōṭum,
mal iṭṭa tōḷāl eṭuttāṉ cilai vāyiṉ vāṅki,
vil iṭṭu uyarnta neṭu mēkam eṉap polintāṉ
col iṭṭu avaṉ tōḷ vali, yār uḷar, colla vallār?