கம்பராமாயணம் 3518 · ஆரணிய 8.116
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மீளா நிறத்து - போரில் பின்னிடாத மார்பினை உடைய; ஆயிரங் கண்ணவன் விண்ணின் ஓட - (உடலில்) ஆயிரம் கண்களை உடைய இந்திரன் வானத்தில் (தோற்று) ஓடுமாறு, வாளால் ஒறுத்தான் - (அவனைத் தன் சந்திரகாசம் என்ற) வாளினால் தண்டித்து வென்றவனாகிய இராவணன் உடைய; சிலை வாயிடை நின்றும் வாங்கி - வில்லினைத் தன் வாயில் இருந்து எடுத்து, தாளால் இறுத்தான் - (தன்) கால்களால் ஒடித்தான்; தழல் வண்ணன் - நெருப்பைப் போன்று சிவந்த நிறமுடைய சிவபிரானது; தடக்கை வில்லை - கையில் இருந்த வில்லைத், தோளால் இறுத்தான் - (தன்) தோள் ஆற்றலால் ஒடித்தவனாகிய இராமனது; துணை - துணையாய் அமைந்தவனும்; தாதை தன் அன்பின் தோழன் - (அவனது) தந்தையாகிய தசரதனுக்கு அன்புடைய தோழனும் ஆகிய (சடாயு).
இராவணனது வில்லை அலகால் கௌவிப் பிடுங்கிய சடாயு அதைத் தன் தாளால் இறுத்தான் என்க. சிவன் வில்லைக் கையால் ஒடித்தவனாகிய இராமனுக்குத் துணைவனும், தசரதன் தோழனும் ஆகிய சடாயு இராவணன் வில்லைக் காலால் ஒடித்தான் என நயம் படக் கூறியமை காண்க. இராமன் தழல் வண்ணன் தடக்கை வில்லைத் தோளால் இறுத்தது.
தடுத்து இமையால் இருந்தவர் தாளில் மடுத்ததும், நாண்நுதி வைத்ததும் நோக்கார்; கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால் எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார் (699)
என்று கார்முகப் படலத்தில் கூறப்பட்டுள்ளமை காண்க. மீளாநிறம் - பின்னிடாத மார்பு; நிறம் - மார்பு. ஒறுத்தான் - தண்டித்து வருத்தினவன், இராவணன். மீளா - ஈறுகெட்ட எதிர் மறைப்பெயரெச்சம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The bow of him who with his sword had punished the thousand-eyed one,
- he of the unretreating breast, so that he fled into the sky, he took from his beak
- and broke with his feet: he, the ally of the one who with his shoulders broke
- the bow in the great hand of the fire-coloured god, and the loving friend of that one's father.
What the poem says
Irāvaṇaṉ's bow had once driven Indra, the thousand-eyed king of the gods, fleeing across the sky, beaten by Irāvaṇaṉ's sword. Now Caṭāyu takes that bow out of his beak and snaps it with his feet.
The poet draws a playful parallel. Irāmaṉ broke the great bow of fire-coloured Śiva with his arms, so swiftly, as the earlier canto of the bow put it, that the onlookers saw him lift it and then only heard it snap. Caṭāyu, Irāmaṉ's ally and his father Tacarataṉ's dear friend, breaks Irāvaṇaṉ's bow with his feet.