கம்பராமாயணம் 3519 · ஆரணிய 8.117

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஞாலம் படுப்பான் தனது ஆற்றலுக்கு ஏற்ற நல் வில்
மூலம் ஒடிப்பு உண்டது கண்டு , முனிந்த நெஞ்சன் ,
ஆலம் மிடற்றான் புரம் அட்டது ஒர் அம்பு போலும்
சூலம் எடுத்தான் எறிந்தான் , மறம் தோற்றிலாதான் .

பொருள் · Meaning in Tamil

ஞாலம் படுப்பான் - உலகுக்கு அழிவைச் செய்பவனும், மறம் தோற்றிலாதான் - யாருக்கும் வீரத்தில் தோல்வி அடையாதவனும் ஆகிய இராவணன்; தனது ஆற்றலுக்கு ஏற்ற - தனது வலிமைக்குப் பொருத்தமான; நல்வில் மூலம் ஒடிப்புண்டது கண்டு - நல்ல (வலிய) வில் முழுதும் ஒடிக்கப்பட்டது கண்டு; முனிந்த நெஞ்சன் - சினமடைந்த நெஞ்சத்தனாய்; ஆலம் மிடற்றான் புரம் அட்டது ஓர் அம்பு போலும் - ஆலகால நஞ்சை மிடற்றில் கொண்ட (நீலகண்டன்) முப்புரத்தை அழிப்பதற்காகக் (கைக் கொண்ட) ஒப்பற்ற (திருமால் ஆகிய) அம்பு போன்ற; சூலம் எடுத்து ஆர்த்து எறிந்தான் - சூலப்படையைக் (கையில்) எடுத்துப் பேரொலியோடு (சடாயுவின் மீது) வீசினான்.

இராவணன் தனது வலிய வில் சடாயுவால் ஒடிக்கப்பட்டது கண்டு முனிவு கொண்டு, நீலகண்டன் முப்புரம் எரிக்கக் கைக் கொண்ட திருமாலாகிய அம்பு போன்ற சூலத்தை எடுத்துச் சடாயுவின் மீது எறிந்தான் என்க. மூலம் - முழுதும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The destroyer of the world, seeing the good bow worthy of his strength
  2. broken right through, his heart enraged,
  3. seized a trident like the arrow with which the god of the poison-dark throat destroyed the cities,
  4. and with a roar he hurled it, he who had never lost in valour.

What the poem says

Irāvaṇaṉ, scourge of the world and never before beaten in battle, is furious to see his mighty bow snapped in two. He grabs a trident and flings it at Caṭāyu with a roar.

The trident is likened to the arrow Śiva, whose throat is dark with the poison he swallowed, used to burn the three flying cities; that arrow was Viṣṇu himself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ñālam paṭuppāṉ taṉatu āṟṟalukku ēṟṟa nalvil
mūlam oṭippuṇṭatu kaṇṭu, muṉinta neñcaṉ,
ālam miṭaṟṟāṉ puram aṭṭatu ōr ampu pōlum
cūlam eṭuttu ārttu eṟintāṉ, maṟam tōṟṟilātāṉ.