கம்பராமாயணம் 352 · பால 7.22
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உருத்து மண் எடுப்பினும் - கோபித்து, இந்தப் பூமியை எடுப்பதாயினும்; கடலை வாரினும் - கடல்நீரையெல்லாம் அள்ளுவதானாலும்; உருத்து விண் இடிப்பினும் - கோபம்கொண்டு மேகத்தை இடிப்பதானாலும்; வேண்டின் செய்கிற்பாள் - அவள் விரும்பினால் செய்ய வல்லவளாவாள்; எண் உருத் தெரி வரும் - எண்ணத்தினால் செய்யப்படும் நுண்மையான பாவமும் (உடலால்) செய்யப்படும் பருமையான பாவமும் உருவம் கொண்டு; பாவம் ஈண்டி - ஒரு சேரச் சேர்ந்து; ஓர்பெண் உருக்கொண்டு என - ஒரு பெண்வடிவைக் கொண்டது என்னும்படி; திரியும் பெற்றியாள் - இங்குத் திரிகின்ற தன்மை உடையவள்.
'மண்' சினையாகு பெயராய்ப் பூமியை உணர்த்தும். உருத்தல்: சினத்தல். வாரினும்: வாருதல் அள்ளுதலுமாம்). விண்: வானம்: இங்கு மேகத்தை உணர்த்தும். நுண்மையான பாவம் பருமையான பாவம் என்பன கண்ணால் காண முடியாதது. பெற்றி: தன்மை. பூமியை எடுக்கவும், கடல் நீரை அள்ளவும், மேகத்தை இடிக்கவும் செய்யவல்லவள். பாவமெல்லாம் திரண்டு ஒரு பெண் வடிவம் கொண்டது போன்ற தன்மையள் என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- If she wished, she could do it, whether to lift the earth in rage, or scoop up the sea,
- or in rage smash the sky;
- she is of a nature that roams about as if all sin, subtle and gross, past knowing,
- had gathered together and taken the form of a woman.
What the poem says
The sage goes on describing Tāṭakai's power. In her fury she could lift the earth, scoop up the ocean, or shatter the clouds, if she so chose.
She is like every sin there is, both the subtle sins of thought and the gross sins of the body, gathered into one heap and given a woman's shape, wandering the land.