கம்பராமாயணம் 353 · பால 7.23
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பெரு வரை இரண்டொடும் - பெரியமலைகள் இரண்டுடனும்; பிறந்த நஞ்சொடும் - தன்னிடம் தோன்றிய நஞ்சுடனும்; உரும் உறழ் முழக்கொடும் - இடிக்கு ஒப்பான முழக்கத்துடனும்; ஊழித் தீயொடும் - ஊழிக் காலத்துப் பெரு நெருப்புடனும்; இரு பிறை செறிந்து - இரண்டு பிறைச் சந்திரர்கள் சேர்ந்து; எழுகடல் உண்டாம் எனின் - எழுகின்ற கடல் ஒன்று உண்டென்றால் அது; வெருவரு தோற்றத்தள் மேனிமானும் - யாவரும் அஞ்சத்தக்க தோற்றத்தை உடைய அவளது உடலை ஒத்ததாகும்.
பெருவரை: பெரியமலை. கொங்கைகள் இரண்டும் மலைகள் கண்கள் இரண்டும். நஞ்சு: பெருங்குரல். இடிமுழக்கம். கூந்தல்: ஊழித்தீ. கோரைப்பற்கள். பிறைச் சந்திரன் இவையெல்லாம் உடைய கடல் ஒன்று உண்டெனில் இவள் உடலுக்கு ஒக்கும் எனக் கூறியது இல்பொருள் உவமை யணியாம். மானும்: ஒத்திருக்கும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- If there were an ocean that rose up with two great mountains, with the poison born in it,
- with a roar like thunder, with the fire at the end of the age,
- and with two crescent moons set close in it,
- it might resemble the body of her whose form inspires dread.
What the poem says
Tāṭakai's body is compared to an imaginary ocean, a figure the commentary calls a simile with a nonexistent object. Her two breasts are the mountains and her eyes the poison (recalling the poison that rose from the churned ocean); her voice is the thunderous roar, her hair the fire of doomsday, and her two curved fangs the crescent moons.
No such sea exists, but if it did, it would look like her.