கம்பராமாயணம் 354 · பால 7.24

Section பால காண்டம் / 7. தாடகை வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சூடக அரவு உறழ் சூலக் கையினள்
காடு உறை வாழ்க்கையள் கண்ணில் காண்பர் ஏல்
ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்!
தாடகை என்பது அச் சழக்கி நாமமே.

பொருள் · Meaning in Tamil

ஆடவர் கண்ணில் காண்பரேல் பெண்மையை அவாவும் தோளினாய் - ஆண்களும் உன்னைக் காண்பாராயின் பெண்தன்மையை விரும்பத் தகுந்த தோளாற்றலுடையவனே; சூடகம் அரவு உறழ் சூலம் கையினள் - கையணியாகப் பாம்புகளை உடையவள் சூலம் உடையவள்; காடு உறை வாழ்க்கையள் - இவ்வனத்தில் வாழும் வாழ்க்கை உடையவள்; அச் சழக்கி நாமம் தாடகை என்பது - இத்தகைய இக்கொடியவளது பெயர் தாடகை என்பதாம்.

சூடகம்: கையில் அணியும்அணி (வளையல்). அரவு: பாம்பு. சூடகமாக அரவுறழ் கை: சூலக்கை எனக்கூட்டி உரை காண்பர் கையணியாக நாகங்களை அணிந்திருக்கிறாள். சூலம் ஏந்தியிருக்கிறாள் என்பது பொருள் உறை வாழ்க்கை: வினைத்தொகை. ராமனது தோளாற்றல் கண்ட ஆண்களும், பெண்மையை அவாவுவர் என்றார் அவாவுதல்: விரும்புதல். சழக்கி: கொடியவள். நாமம்: பெயர் கண்டார் விரும்பும் தோளாற்றல் உடையவன் என்பதால் உலகுயிர்கள், ஆண், பெண் அடங்க அனைத்தும் பெண் தன்மையே என்பதும் கருத்தாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She whose hand holds a trident, with snakes coiled on it for bracelets,
  2. she who makes her life dwelling in the forest: O you whose shoulders are such
  3. that men who saw them with their eyes would long to be women,
  4. Tāṭakai is the name of that wicked one.

What the poem says

The sage finally names her: Tāṭakai, who wears serpents as bangles, carries a trident and lives in this forest.

He addresses Irāmaṉ with a striking epithet: his shoulders are so beautiful that even men who see them wish they were women, so they might love him. The commentary adds a devotional reading: before the Lord, every soul, male or female, stands in the position of the beloved.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cūṭaka aravu uṟaḻ cūlak kaiyiṉaḷ
kāṭu uṟai vāḻkkaiyaḷ kaṇṇiṉ kāṇparēl
āṭavar peṇmaiyai avāvum tōḷiṉāy!
tāṭakai eṉpatu ac caḻakki nāmamē.