கம்பராமாயணம் 3546 · ஆரணிய 8.144
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பருஞ்சிறை - பெரிய சிறகுகளை உடைய சடாயு; இன்னன பன்னி - இத்தகைய சொற்களைச் சொல்லி; அருஞ்சிறை உற்றனள் ஆம் எனா மனம் உன்னுவான் - (சீதை) நீங்குதற்கு அரிய (இராவணனது) சிறைச் சாலையை அடைந்தாள் போலும் என்று மனத்தில் நினைத்து; பொரும் சிறை அற்றதேல் - போர் செய்கிற (என்) சிறகுகள் அழிவடைந்தது எனினும், பூவை கற்பு எனும் இருஞ்சிறை அறாது என - நாகண வாய்ப்புள் போன்ற (இனிய மொழி பேசும்) சீதையினுடைய கற்பு என்கிற பெரிய சிறகு அழியாது என்று எண்ணி; இடரின் நீங்கினான் - துன்பம் நீங்கியவனானான். பலவாறு எண்ணிய சடாயு சீதை இராவணனது நீங்குதற்கு அரிய சிறைச் சாலையை அடைந்தாள் போலும் என எண்ணி, அவ்வாறெனினும் என் சிறகுகள் போலச் சீதையின் கற்பெனும் சிறகு அழியாது என எண்ணி வருத்தம் நீங்கினான். பருஞ்சிறை - பெரிய சிறகுகள்; இங்கு ஆகுபெயராய்ச் சடாயுவைக் குறித்தது. பூவை - நாகண வாய்ப்புள் (இனிய மொழி) குறித்தது. சிறையுற்றாலும் கற்பெனும் இருஞ்சிறை அறாது என்றதன் நயம் காண்க. திருக்குறட் கருத்தையும் உன்னுக. பருஞ்சிறை - பண்புத்
ஆங்கிலம் · English translationAI
Translation
- He of the great wings, musing over these things, thought,
- She must have come into a prison hard to escape; but then, in his mind,
- Though my fighting wings are cut off, the great wing
- of chastity of that mynah-voiced one will not be cut, and he was freed of his distress.
What the poem says
The poem plays on the Tamil word ciṟai, which means both wing and prison. Caṭāyu, the great-winged one, guesses that Cītai must now be shut in Irāvaṇaṉ's prison, from which escape is hard. Then he consoles himself: his own fighting wings have been cut off, but the great wing of her chastity can never be cut. Cītai, sweet-voiced as a mynah, will keep her virtue even in captivity.