கம்பராமாயணம் 3548 · ஆரணிய 8.146
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அரக்கனும் - அரக்கன் ஆகிய இராவணனும்; வஞ்சியை - வஞ்சிக் கொடி போன்ற சீதையை; வல்லை கொண்டு போய் - விரைவாக எடுத்துக் கொண்டு போய்; திரு உரு செஞ்செவே தீண்ட அஞ்சுவான் - (சீதையின்) திருவுருவத்தை (வலிய) நேராகத் தொடுதற்கு அஞ்சியவனாய்; ஆயிடை - அவ்விடத்தில்; சிஞ்சுபவனத்திடை - அசோக வனத்தின் இடையில்; நஞ்சு இயல் அரக்கியர் நடுவண் - நஞ்சின் தன்மை பொருந்திய கொடிய அரக்கியர்களுக்கு நடுவில்; சிறை வைத்தான் - (சீதையைச்) சிறைக் காவலில் வைத்தான்.
இராவணன் சீதையை விரைவாக மண்ணொடுங் கொண்டு போய் அவளது திருவுருத் தீண்ட அஞ்சியவனாய் அசோக வனத்தில் நச்சுத் தன்மை உள்ள அரக்கியர்களுக்கு நடுவில் சிறைக் காவலில் வைத்தான். வல்லை - விரைவாக. சிஞ்சுபவனம் - அசோக வனம். அஞ்சுவான் - முற்றெச்சம். அரோ - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The demon carried the creeper-like lady swiftly away,
- and, fearing to touch her sacred form directly,
- in the midst of demonesses of poisonous nature, there,
- in the grove of śiṃśapā trees, he held her captive.
What the poem says
Irāvaṇaṉ carries Cītai swiftly to Ilaṅkai. Still afraid to lay a finger on her sacred person, he imprisons her, earth and all, in the aśōka grove, the śiṃśapā garden, surrounded by venomous demon women as her guards.