கம்பராமாயணம் 3604 · ஆரணிய 8.202
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மண்ணகம் திரிய - நிலவுலகம் (தன் நிலை கெட்டுக் சுழல; நின்ற மால் வரை திரிய - அசையாது நிற்கும் பெரிய மலைகள் சுழல; மற்றை - மற்றும்; கண் அகன் புனலும் - இடமகன்ற (கடல்) நீரும்; காலும் - காற்றும்; கதிரொடும் திரிய - கதிரவன் நிலவு உடன் சுழல; காவல் விண்ணகம் திரிய - தேவர்கள் காக்கும் மேல் உலகம் சுழல; மேலை விரிஞ்சனும் திரிய - மேல் உலகில் உள்ள பிரமனும் சுழல; வீரன் - வீரனாகிய இராமன்; எண் அரும் பொருள்கள் எல்லாம் என்பது - தான் எண்ண முடியாத உலகப் பொருள்கள் எல்லாவற்றின் வடிவமாக உள்ளவன் என்பது; தெரிந்தது அன்றே - நன்கு விளங்கியது.
அனைத்தும் அவனான படியினாலே அவன் மனநிலை மாறிச் சினந்தவுடன் அனைத்துப் பொருள்களும் நிலை திரிந்தன என்றபடி. கால் - காற்று, விரிஞ்சன் - பிரமன், மால்வரை - உரிச்சொல் தொடர், ஐ - சாரியை, அன்றே - ஏகாரம் தேற்றம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the earth reeled, as the great mountains that stand unmoving reeled, and as the
- wide-spreading waters and the wind reeled together with the sun and moon, as the guarded
- heaven reeled, and as Viriñcaṉ on high reeled too, it became clear
- then that the hero is all the countless things that are.
What the poem says
Irāmaṉ's anger sets the whole universe spinning out of its place: earth, mountains, ocean, wind, sun and moon, the heaven of the gods, and even Viriñcaṉ, that is Piramaṉ the creator.
The poet draws the theological point: everything was shaken because Irāmaṉ is himself the form of all things. When his inner state changed, all that exists changed with him.