கம்பராமாயணம் 3605 · ஆரணிய 8.203
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
குறித்த வெங்கோபம் - (இராமன் மனத்தில்) கொண்ட கொடிய சினம்; யார் மேல் கோளுறுங் கொல் - யாவர் மேல் செலுத்தப்படும்கொல்; என்று அஞ்சி - என்று எண்ணி அஞ்சி; உலகம் எல்லாம் - உலகங்கள் எல்லாம்; வெறித்து நின்று - திகைப்படைந்து நின்று; விம்முறுகின்ற வேலை - கலங்குகிற நேரத்தில்; பொறிப் பிதிர் படலை - பொறிகளின் தொகுதி; செந்தீப் புகையொடும் பொடிப்ப - சிவந்த நெருப்பு புகையுடன் தோன்றும் படி; எறிப்பது ஓர் முறுவல் பொம் என்று தோன்ற - ஒளி விடுவதான ஒப்பற்ற புன்சிரிப்பு பொம் என்று தோன்ற; இராமனும் இயம்பல் உற்றான் - இராமனும் சில கூறத் தொடங்கினான்.
இராமனது சினம் யார் மேல் செல்லுமோ என அனைத்துலகும் திகைத்து நின்ற நிலையில், செந்தீப் புகையொடு எழ அவன் வெகுளி கொண்டு புன்முறுவல் பூத்துக் கூறலானான் என்பதாம். கோளுறுதல் - செல்லுதல். வெறித்து - திகைத்து. படலை - கொழுந்துத் தொகுதி. பொம் - ஒலிக் குறிப்பு; பிதிர்தல் - சிதறல். கொல் - ஐயப் பொருள் தருவதோர் இடைச்சொல். உலகம் - இடவாகுபெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Fearing, 'On whom will this fierce anger he has conceived descend?',
- all the worlds stood stunned and shuddered; at that moment,
- with a mass of scattering sparks and red fire and smoke bursting out,
- a blazing smile flashed forth, and Irāmaṉ began to speak.
What the poem says
The worlds hold their breath, terrified to learn where Irāmaṉ's anger will strike. Then he smiles, but it is a smile of wrath: sparks, red flame and smoke burst out with it.
The 'smile of anger' is a familiar heroic convention in Tamil poetry, the grim laugh of a warrior about to destroy. The next verses give Irāmaṉ's furious words.