கம்பராமாயணம் 3607 · ஆரணிய 8.205
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தாரகை உதிருமாறும் - (என் வில்லாற்றலால்) விண்மீன்கள் உதிரும் தன்மையையும்; தனிக் கதிர் பிதிருமாறும் - ஒப்பற்ற கதிரவன் பொடியாகிச் சிதறும் தன்மையையும்; பேர் அகல் வானம் எங்கும் - பெரிய அகன்ற வானம் முழுவதும்; பிறங்கு எரி பிறங்கு மாறும் - விளங்குகின்ற நெருப்புப் பற்றி எரியும் தன்மையையும்; நீரொடு நிலனும் காலும் - நீரும் நிலமும் காற்றும்; நின்றவும் - (ஐம்பூதங்களில் மூன்றை நீக்கி) நின்ற நெருப்பும் வானமும் (ஆகிய ஐம்பூதங்களும்), திரிந்த யாவும் - சரப் பொருள்களாய் உள்ள பிற யாவும்; வேரொடு மடியுமாறும் - அடியோடு அழியும் தன்மையையும்; விண்ணவர் விளியுமாறும் - தேவர்கள் அழியும் தன்மையையும்; காண் என... (அடுத்த பாடலில் இணையும்). தாரகை - விண்மீன்கள். பிறங்குதல் - விளங்குதல். பிதிர்தல் - துண்டாய்ச் சிதறுதல். பேர் அகல் - ஒரு பொருட் பன்மொழி. நின்றவும் - வினையாலணையும் பெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'How the stars will drop down, how the peerless sun will shatter into pieces,
- how bright fire will blaze up over all the vast wide sky,
- how water and earth and wind, and the elements that remain, and all things that move
- will perish root and all, and how the gods will die,'
What the poem says
Irāmaṉ continues his threat, listing the destruction Caṭāyu will witness. The stars will fall, the sun will be broken to bits, fire will fill the sky, and all five elements, water, earth, wind and the remaining fire and space, along with every moving creature, will be wiped out to the root, and the gods with them.
The sentence is not finished here: it runs on into the next verse, which ends with 'see!'