கம்பராமாயணம் 3608 · ஆரணிய 8.206

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''

பொருள் · Meaning in Tamil

இக்கணம் ஒன்றில் - இந்த ஒரு கணத்தில்; நின்ற - நிலை பெற்று நின்றுள்ள; மிக்கன போன்று தோன்றும் - மிகவும் பெரியவை போல் தோன்றுகிற; ஏழினொடு ஏழு சான்ற உலகங்கள் - பதினான்கு என்ற எண் தொகை அமைந்த உலகங்கள்; வீயுமாறும் - அழியும் தன்மையையும்; திக்குடை - எட்டுத் திக்குகளை உடைய; அண்ட கோளம் புறத்தவும் - அண்ட கோளத்துக்குப் புறத்தில் உள்ளவையும்; தீந்து - (சினந்தால்) கருகிப் போய்; நீரின் மொக்குளின் உடையுமாறும் - நீரில் தோன்றுகிற குமிழி போல உடைந்து போகும் தன்மையினையும்; காண் - காண்பாயாக; என முனியும் வேலை - என்று கூறிச் சினந்த போது...., (அடுத்த பாடலில் வரும், செய்திகளோடு தொடர்புபட்டு முடியும்)

நிலை பெற்று மிகப் பெரியவை போல் தோன்றுகிற பதினான்கு உலகங்களும் நீர்க்குமிழி போல் என் சினத்தால் அழிவதைக் காண் என்றவாறு. இக்கணம் ஒன்றில் - அழிவின் விரைவு குறித்தது. மிக்கன போன்று தோன்றும் - தன் ஆற்றலுக்கு முன் அவை மிக்கன அல்ல என்பது குறித்தது. வீயுமாறு - அழியுமாறு. தீந்து - கருகி. மொக்குள் - குமிழ். முனிதல் - சினத்தல். வேலை - பொழுது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'how in this single instant the worlds, seven and seven,
  2. which stand firm and seem so mighty, will perish,
  3. and how all that lies beyond the globe of the universe with its directions will be scorched
  4. and burst like bubbles on water: see!' As he raged so, at that moment...

What the poem says

This completes Irāmaṉ's threat. In one instant the fourteen worlds, which seem so vast and permanent, will be destroyed, and even what lies outside the shell of the universe will be scorched and burst like bubbles on water.

'Seem so mighty' implies that before his power they are nothing great. The verse ends mid-sentence, 'at that moment', leading into the next verse, where Ilakkuvaṉ steps in.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' ik kaṇam oṉṟil, niṉṟa ēḻiṉoṭu ēḻu cāṉṟa
mikkaṉa pōṉṟu tōṉṟum, ulakaṅkaḷ vīyumāṟum,
tikkuṭai aṇṭa kōḷap puṟattavum tīntu, nīriṉ
mokkuḷiṉ uṭaiyumāṟum, kāṇ '' eṉa muṉiyum vēlai.