கம்பராமாயணம் 3609 · ஆரணிய 8.207
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வெஞ்சுடர்க் கடவுள் - வெப்பமான கதிர்களை உடைய கதிரவன்; மீண்டு - (அவனது சினத்தில் இருந்து) தப்பி; மேருவில் மறையலுற்றான் - மேரு மலையில் மறையத் தொடங்கினான்; எஞ்சல் இல் - அழிதல் இல்லாத; திசையில் நின்ற யானையும் - திக்குகளில் (நிலை பெற்ற) நின்றுள்ள (எட்டு) யானைகளும்; இரியல் போய - அஞ்சி ஓடிப் போயின; உலகம் எல்லாம் துஞ்சின என்பது என் - உலகில் உள்ள உயிரினங்கள் எல்லாம் வருத்தம் கொண்டன என்று கூறுவது ஏன்?; துணிந்த நெஞ்சின் - மிக நெஞ்சுரம் கொண்ட; இளைய கோவும் - இலக்குவனும்; அஞ்சினன் - அஞ்சினன் என்றால்; அயல் உளோர்க்கு அவதி உண்டோ - மற்றும் உள்ளோர் கொண்ட அச்சத்துக்கு எல்லை உண்டோ? (இல்லை).
கதிரவன் மேரு மலையில் மறைய, திசை யானைகள் அஞ்சி ஓட, மிக்க வலிமையும் மன ஊக்கமும் படைத்த இலக்குவனே அஞ்ச, அயல் உள்ளோர் பேரச்சம் கொள்ள இராமன் பெருஞ்சினம் கொண்டான் என்க. இரியல் - ஓடல். துஞ்சுதல் - அழிதல்; ஈண்டு வருந்துதல். அவதி - துன்பம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The god of the burning rays turned back and began to hide himself behind Mēru;
- the elephants that stand in the never-failing quarters fled in terror;
- why even say that all the worlds were in anguish? The younger prince, of fearless heart,
- was afraid himself; could there be any limit to the fear of everyone else?
What the poem says
The effect of Irāmaṉ's threat. The sun shrinks back and hides behind Mount Mēru, the axis of the world; the eight elephants that hold up the eight directions run away.
The climax is that Ilakkuvaṉ, the bravest and most steadfast of men, is frightened by his brother's fury; if he is afraid, the terror of all other beings is beyond measure.