கம்பராமாயணம் 3611 · ஆரணிய 8.209

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1'' நாள் செய்த கமலத்து அண்ணல் நல்கின நவை இல் ஆற்றல்
தோள் செய்த வீரம் என்னில் கண்டனை ; சொல்லும் உண்டோ ?
தாள் செய்ய கமலத்தானே முதலினர் , தலை பத்து உள்ளாற்கு
ஆட் செய் கின்றார்களன்றி , அறம் செய்கின்றார்கள் யாரே ? ''

பொருள் · Meaning in Tamil

நாள் செய்த கமலத்து அண்ணல் - அன்று மலர்ந்த செந்தாமரை மலரில் தோன்றிய தலைவனான பிரமன்; நல்கிய - தந்த (வரத்தினால் பெற்ற); நவை இல் ஆற்றல் - குற்றம் இல்லாத வலிமை உடைய, தோள் - தோளினால்; செய்த வீரம் - (இராவணன்) செய்த வீரச் செயலை; என்னில் கண்டனை - (சிறகு அறுபட்டு வீழ்ந்த நிலையில்) என்னிடத்தில் (நேரடியாகக்) கண்டாய்; சொல்லும் உண்டோ? - (அவ்வீர ஆற்றல் பற்றி வேறு) சொல்ல வேண்டுவதும் உள்ளதா?; தாள் செய்ய கமலத்தானே முதலினர் - நாளத்தொடு உள்ள செந்தாமரை மலரில் தோன்றிய பிரமன் முதலிய தேவர்கள்; தலை பத்து உள்ளாற்கு - தலை பத்து உள்ள இராவணனுக்கு; ஆட் செய்கின்றார்கள் - அடிமைத் தொழில் செய்கின்றார்கள்; அன்றி - அல்லாமல்; அறம் செய்கின்றார்கள் யாரே - (அவர்களின்) உரிய அறம் செய்கின்றவர்கள் யார்? என்றபடி (ஒருவருமில்லை என்பதாம்.

ஆற்றல் மிக்க என்னையே சிறகு அறுபட்டு விழுமாறு செய்த இராவணனை எதிர்த்து வெல்லும் வலிமை பிரமனை முதலாகக் கொண்ட தேவர்களுக்கு இல்லையாம் படியினாலே, நீ அவர்கள் மீது சினம் கொள்ளாதே என்றவாறு. சினம் பொங்கினால் செயல் மங்கும் என்பது சடாயு கவலை. நாள் செய்த கமலம் - அன்று மலர்ந்த செந்தாமரை, நவை - குற்றம், தாள் - நாளம், தண்டு, ஆட் செய்தல் - அடிமைத் தொழில் செய்தல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The flawless strength granted by the lord of the freshly opened lotus,
  2. the valour his shoulders wrought, you have seen in me; is there anything more to say?
  3. Those headed by the one on the lotus with its red stalk do slave's work
  4. for the one who has ten heads; which of them does what is right?'

What the poem says

Caṭāyu continues. Irāvaṇaṉ's might comes from boons granted by Piramaṉ, the god born on the lotus, and Irāmaṉ can see what it does by looking at Caṭāyu himself, cut down with his wings severed.

Piramaṉ and the other gods are in fact Irāvaṇaṉ's servants; none of them can do their proper duty. So it is pointless to be angry with them. Caṭāyu's real worry is that Irāmaṉ's anger will cloud the task ahead.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' nāḷceyta kamalattu aṇṇal nalkiya navai il āṟṟal
tōḷ ceyta vīram eṉṉil kaṇṭaṉai; collum uṇṭō?
tāḷ ceyya kamalattāṉē mutaliṉar, talai pattu uḷḷāṟku
āṭ ceykiṉṟārkaḷ aṉṟi, aṟam ceykiṉṟārkaḷ yārē? ''