கம்பராமாயணம் 3612 · ஆரணிய 8.210
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தெண்திரை உலகம் தன்னில் - தெளிந்த அலைகளை உடைய (கடலால் சூழப்பட்ட இந்த) உலகத்தில்; பெண்டிரின் - பெண்களைப்போல; செறுநர் மாட்டு ஏவல் செய்து - பகைவர்களாகிய (அரக்கர்களிடம்) ஏவல்கூவல் பணி செய்து; வாழ்வர் அன்றே - வாழ்கின்றார்கள் அல்லவா; தேவர் பெற்றி இது அன்றோ? - தேவர்களின் தன்மை இது அல்லவா?, பண்டு உலகு அளந்தோன் - முன்பொரு காலத்து மூவுலகும் ஈரடியால் அளந்த திருமால்; பாற்கடல் அமுதம் - திருப்பாற்கடலில் தோன்றிய அமுதத்தை; அந்நாள் நல்க - அந்த (கடல் கடைந்த) நாளில் கொடுக்க; உண்டிலர் ஆகில் - (அதை இவர்கள்) உண்ணாமல் இருந்திருந்தால்; இந்நாள் - இப்பொழுது; அன்னவர்க்கு - அவர்களுக்கு; உய்தி உண்டோ - (உயிரொடு தப்பிப்) பிழைத்தலும் உள்ளதோ? (இல்லை என்பதாம்).
முன்பு அமிழ்தம் உண்டமையால் தேவர்கள் உயிர் ஒடுங்காது இராவணனுக்கு மகளிர் போல் ஏவல் செய்து உயிர் வாழ்கின்றனர். அவர்கள் இராவணனைச் சீதையைத் தூக்கிச் செல்லும் போது தடுக்க வில்லையே? என்று நீ சினப்பதில் பொருளில்லை என்ற படி. செறுநர் - பகைவர். இன் - உவம உருபு. உய்தல் - தொழிற் பெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'In this world girt by clear waves, they do the bidding of their enemies
- and live on like women, do they not? Is not this the condition of the gods?
- Had they not drunk, on that day of old, the nectar of the Milk Ocean
- given them by him who once measured the world, would they survive even now?'
What the poem says
Caṭāyu describes the plight of the gods: they live like servant women, running errands for their demon enemies. The only reason they are alive at all is that long ago, at the churning of the Milk Ocean, Tirumāl, who measured the worlds in his dwarf incarnation, gave them the nectar of immortality.
So it makes no sense for Irāmaṉ to rage at them for not stopping Irāvaṇaṉ when he carried Cītai away.